தென் கொரியாவில் தனியாக வாழ்பவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருமணம் செய்யாமலேயே வாழ்வது ஏன் எனக் கூறிய காரணங்களில்  போதிய வசதியின்மை மற்றும் வேலைப் பாதுகாப்பு இல்லாததுதான் பெரும்பாலும் பொதுவானதாக இருக்கிறது.

இன்னும், சிலர் குழந்தையை பெற்று வளர்ப்பது பெரிய சவாலான விஷயம் என்று கூறியுள்ளனர். கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் 2021 கணக்கெடுப்பின் படி, மொத்தம் 5.17 கோடி மக்கள் உள்ளனர். 2021இல் 5இல் 2 பேர் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர்.

2050 ஆம் ஆண்டில் தனியாக வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் தென் கொரியர்களின் விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

2021 ஆம் ஆண்டில், 7.2 மில்லியன் அல்லது மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், பல எண்ணிக்கையிலான குடும்பக் குழுவை விட அதிகமாக உள்ளனர். 2000 ஆம் ஆண்டில் 15.5% ஆக இருந்த விகிதம், நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட 40% ஆக அதிகரிக்கும் என்று புள்ளியியல் கொரியா தெரிவித்துள்ளது.தென்கொரியாவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிலாக வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

North Korea Execution: வீடியோ பார்த்தால் மரண தண்டனை.. பப்ளிக்காக வட கொரியா செய்யும் கொடூரம்: அச்சத்தில் பொதுமக்கள்!

இது கிட்டத்த இங்கிலாந்தைப் போலவே இருக்கிறது. ஆனால், ஜப்பான் அல்லது ஜெர்மனியுடன் ஒப்பிடுகையில் குறைவு தான்.

12 சதவீதம் பேர் குழந்தை வளர்ப்பை பெரிய சுமையாக கருதினாலும், 25 சதவீதம் பேர் சரியான பார்ட்னர் கிடைக்காததால் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று சொல்கின்றனர்.