உங்கள் மொபைலில் உள்ள காலெண்டருக்குச் சென்று 1582 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்த பாருங்க… இப்படி பேஸ்புக்கில் தோன்றிய ஒரு பதிவு மெதுவாக வைரலாகி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமிற்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதனால் பயமுறுத்தும் ட்வீட்கள் மற்றும் ரீல்கள் வரத்துவங்கி உள்ளன. 


வைரலாகும் பதிவு


பலர் இதனை பகிர்ந்து வருவதால் பலரும் குழப்பத்திற்கு உள்ளாகி வருகுன்றனர். ஏனெனில் யாரும் இதற்கு பெரிதாக விளக்கம் தரவில்லை, இப்படி ஒரு மர்மம் இருக்கிறது என்று கூறி எல்லோரையும் பயமுறித்தி வருகின்றனர். உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினி நாட்காட்டிகளில் 1582 ஆம் ஆண்டு வரை ஸ்க்ரோல் செய்து பார்த்தால் உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும். வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதத்தில் வெறும் 21 நாட்களே இருக்கும். 










1582 ஆம் ஆண்டின் மர்மம்


1582-ஆம் ஆண்டை நீங்கள் சிரமப்பட்டு கண்டறிந்தால் அதில் வேறு எந்த மாற்றமும் இருக்காது அக்டோபர் மாதத்தில் மட்டும் ஒரு பத்து நாட்கள் காணாமல் போயிருக்கும் அவ்வளவுதான். அக்டோபர் 4 ஆம் தேதிக்கு பிறகு, அக்டோபர் 15 ஆம் தேதி வரும். காலண்டரில் ஏதோ குழப்பம் உள்ளதாக தெரிகிறதல்லவா?










10 நாட்களை காணோம்


அக்டோபர் மாதத்தில் அந்த வருடத்தில் 5 முதல் 14 தேதிகள் வரை காணமல் போயுள்ளன. இதனை திடீரென கண்டுபிடித்த நெட்டிசன்கள் தங்கள் பயந்தது மட்டுமின்றி அனைவரையும் பயமுறுத்தி வருகின்றனர். அப்படி என்னதான் ஆச்சு அந்த பத்து நாளைக்கு!






என்ன காரணம்?


அமெரிக்க வானியல் இயற்பியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான நீல் டி கிராஸ் டைசன் 2020 ஆம் ஆண்டில் இணைய மர்மத்தை தெரிவித்தபோது தலைப்பில் ஆர்வம் காட்டினார். "1582 வாக்கில், ஜூலியன் நாட்காட்டி, ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு லீப் டேயுடன், பூமியின் சுற்றுப்பாதையுடன் ஒப்பிடும்போது பத்து கூடுதல் நாட்களைக் குவித்தது. எனவே, போப் கிரிகோரி தனது புதிய மற்றும் நேர்த்தியான துல்லியமான காலெண்டரை துவங்கும்போது, அந்த ஆண்டில் 10 நாட்களை ரத்து செய்து தொடங்கினார். அப்படித்தான் அக்டோபர் 4-ஐத் தொடர்ந்து அக்டோபர் 15 ஆனது." என்று விளக்கம் தந்துள்ளார்.