உலகமுழுவதும் மதுபான பழக்கம் என்பது பொதுமக்களிடம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதன் தாக்கம் ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரும்பும் இந்த மது குறித்து உலக போதைப்பொருள் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதில், உலகிலேயே மிகவும் மதுபானத்தை அதிகம் விரும்பும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2021ம் ஆண்டு, 22 நாடுகளைச் சேர்ந்த 32,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை உலகின் குடிகார நாடாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை ஒரு தனிநபர் ஒருவர் சராசரி அடிப்படையில் 2020ல் 15 சராசரி என அதிகம் என்றும், உலக சராசரியை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாக்கு அடுத்தபடியாக அடுத்த இரண்டு இடங்களில் டென்மார்க் மற்றும் ஸ்வீடன் உள்ளனர். இந்த நாடுகளில் ஒரு தனிநபர் சராசரி ஆண்டுக்கு சுமார் 23.8 முறை அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியர்கள் வாரத்திற்கு சராசரியாக இரண்டு நாட்கள் தங்கள் கோப்பைகளில் பீர் அல்லது ஒயினை பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த மதுபானம் பழக்கம் அதிகரித்ததற்கு கொரோனா ஊரடங்கு காரணம் என்றாலும், இதனால் அவர்கள் வாழ்க்கையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று உலக போதைப்பொருள் ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து RMIT பல்கலைகழக ஆராய்ச்சியாளர் டாக்டர் மோனிகா பாரட் தெரிவிக்கையில், " மதுபானம் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் நாம் முதல் தரவரிசையில் இருக்கிறோம். குடிப்பழக்கம் ஒரு பங்கை கொண்டிருப்பதை காணப்பட்டாலும், நோர்டிக், பிரிட்டிஷ் மற்றும் வட அமெரிக்க நாடுகளும் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியா மக்கள் தொடர்ந்து போதையில் இருக்கவே நினைக்கிறார்கள். இதுகுறித்து அவர்களிடம் நேரடியாக கருத்துகணிப்பு நடத்தியபோது தெளிவான விளக்கத்தை அவர்களால் தெரிவிக்கமுடியவில்லை. தொடரும் இந்த மதுபான பழக்கத்தால் தான் ஆஸ்திரேலியர்கள் அந்த தரவரிசையில் முதலிடம் பிடித்தனர்.
அதேபோல், ஒரு வருடத்தில் சராசரியாக உட்கொள்ளும் பானங்களின் எண்ணிக்கையில் உலக தரவரிசையில் பிரான்ஸ் முதலிடத்தில் இருப்பதாகவும், 132 கிளாஸ்களுக்கு மேல் பானத்தை அனுபவித்து வருவதாகவும், அதைத் தொடர்ந்து நியூசிலாந்து 122 ஆகவும், ஆஸ்திரேலியர்கள் ஆண்டுக்கு சராசரியாக 106 பானங்கள் அருந்துவதாகவும் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது.நிச்சயமாக, ஆஸ்திரேலியா உலகின் குடிகார நாடு என்ற பட்டத்துடன் வாழவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்