”ராணுவ வீரர்கள் ஒருபோதும் தங்கள் கடமையிலிருந்து தவறுவதில்லை!’ எல்லாரையும் எப்பொழுதும் தமக்கு முன்பாக வைத்து, உயிரை பணயம் வைத்தாலும் அவர்களைக் காப்பாற்றும் இந்த தூய ஆன்மாக்களுக்கு இந்த சொற்றொடர் முற்றிலும் பொருத்தமானது. இவர்கள் தங்களது நாட்டுக்காகச் செய்யும் தியாகத்தை வர்ணிக்க சொற்கள் போதாமை இருந்தாலும், அவர்களின் சில மனதைக் கவரும் செயல்கள் என்றென்றும் நம் இதயங்களில் நீங்காத இடம்பெற்றுவிடும்.


அந்த வகையில் போர்க்களமாகத் தத்தளித்துக் கொண்டிருக்கும் உக்ரைனில் இருந்து ஒரு வீடியோ வைரலாகி உள்ளது.  உக்ரைனின் உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ இதுவரை 52 ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.






ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில், உக்ரைனில் உள்ள தன்னார்வலர்களும், வீரர்களும் குடிமக்களுக்கு நம்பிக்கை அளிக்க தங்கள் பங்கைச் செய்து வருகின்றனர். வைரலான வீடியோவில் உக்ரைன் ராணுவ வீரர்கள் ஒரு ராணுவ வீரரின் கால்களை பிடித்து ஆழமான குழியில் கவனமாக அவரைத் தலைகீழாக இறக்குகின்றனர். சில நொடிகளுக்குப் பிறகு, குழிக்குள் இருந்து ஒரு சிறிய நாயுடன் அந்த சிப்பாய் வெளிப்பட்டார்.


இந்த வீடியோதான் தற்போது வைரலாகி உள்ளது. அதே நேரத்தில் நெட்டிசன்கள் நாயைக் காப்பாற்றியதற்காக வீரர்களை பாராட்டி வருகின்றனர். ஒருவர் கமெண்ட் செய்ததில், "இது என்னை முற்றிலும் அழச் செய்தது. இது உண்மையிலேயே நம்பமுடியாதது. நாய்க்குட்டியைக் காப்பாற்றியதற்கு நன்றி!" என பதிலிட்டார். இரண்டாவது நபர் கமெண்ட் செய்கையில், ". என்ன ஒரு தூய உள்ளம். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக" எனப் பதிவு செய்துள்ளார்.


"இந்த மனதைக் கவரும் கிளிப்பைப் பகிர்ந்ததற்கு நன்றி," என்று மூன்றாவது நபர் கூறியுள்ளார். நான்காவது நபர் கூறுகையில்,"அந்த நாயை மீட்டதற்காக உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்!! உங்களைப் போன்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி!" எனப் பதிவிட்டுள்ளார்.