பேருந்தில் அமர்ந்திருக்கும் ஓட்டுநர் ஒருவர், பேருந்தின் ஜன்னல்களை திறந்து, இறைச்சியை குச்சியில் தொடங்கவிட்டபடி, மரத்திற்கு அருகே உலாவி கொண்டிருந்த ஒரு புலியை அழைக்கிறார்.


 






இறைச்சியை பார்த்த புலி, பாய்ந்து வந்து அவரிடம் இருக்கும் புலியை ரசித்து சாப்பிடுகிறது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 'தி அமேசிங் டைகர்ஸ்' வெளியிட்டுள்ளது.


வீடியோவில், ஒருவர் குச்சியில் இறைச்சித் துண்டை வைத்திருப்பதைக் காணலாம். அதை பார்த்த புலி ஒய்யாரமாக வந்து, ஜன்னலுக்கு உள்ள தலையை நீட்டி அதை கவ்வுகிறது. இறைச்சி துண்டு கீழே விழாதவாறு காலை வைத்து வாயை மறைப்பதை வீடியோவில் காணலாம்.


புலிக்கு உணவளித்த பிறகு, ஓட்டுநர் விலங்கைப் போகும்படி கையை அசைத்து சைகை காண்பித்தபடி ஜன்னலை மூடுகிறார்.


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 30,000 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. வீடியோவைப் பார்த்து, சிலர் இதை தைரியமான செயல் என பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளனர். பலர் டிரைவரின் செயல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். 


ஒரே பாய்ச்சலில் புலிகள் சிறிய இடங்களுக்குள் நுழையும் என்று உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். லைக்குகளுக்காக முட்டாள்தனத்தை செய்து கொண்டே இருங்கள் என்று ஒரு பயனர் சாடியுள்ளார். மற்றொருவர், "இதுபோன்ற வீடியோக்களை தவிர்க்கவும். பதிவுகளுக்காக விலங்குகளை தொந்தரவு செய்யாதீர்கள்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண