இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரண்டு நகரங்கள் அணுகுண்டு வீசி அழிக்கப்பட்டன. இந்த கோர சம்பவத்தை நினைவுக்கூறும் விதத்தில் இந்த தினம் வருடா வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.


கோரத்தாக்குதல்


இரண்டாம் உலகப் போரின்போது, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, குண்டுவீச்சு விமானமான B-29 ஐ பயன்படுத்தி அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் ஒரே ஒரு அணுகுண்டை வீசியது. குண்டு வீசப்பட்ட ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திற்குள், ஒரு மாபெரும் நெருப்புக் கோளம் உருவானது. இந்த நெருப்பு 900 அடி தூரத்திற்கு பரவியது. அனு குண்டு வெடிப்பினால் உண்டான அதிர்ச்சியினால் மட்டுமே, பத்து மைல் தொலைவில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் வரை நொறுங்கின. குண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து 4.4 மைல் தொலைவில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகி விட்டன. இந்த அதிர்வு 37 மைல் தொலைவுக்கு உணரப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்வு பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவை, முற்றிலுமாக அழித்து விட்டது.



ஏற்பட்ட சேதங்கள்


இந்த தாக்குதல் காரணமாக அந்நகரத்தில் பல கட்டிடங்கள் சேதத்திற்குள்ளானது. ஜப்பானிய அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் படி, ஹிரோஷிமா நகரத்தில் இருந்த 69 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது, அதாவது மூன்றில் ஒரு பங்கு. ஒரே ஒரு அணுகுண்டால் ஆயிரக்கணக்கான உயிர்கள் மடிந்து எழுபத்தேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. வரலாற்றில் அணு ஆயுதத்தால் தாக்கப்பட்ட முதல் நகரமும் அதுதான்.


தொடர்புடைய செய்திகள்: அடுத்த 48 மணிநேரத்தில் அதிரடிகாட்ட இருக்கும் மழை.. 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!


அமைதி நகரம்


ஜப்பானில் அமைதி அரசியலை ஊக்குவிக்க ஹிரோஷிமா தினம் வருடா வருடம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது மிகப்பெரிய அழிவை சந்தித்த ஹிரோஷிமா நகரம், அந்நாட்டு மக்களின் அசாத்திய உழைப்பால் அதிலிருந்து மீண்டு உலகப் புகழ்பெற்ற அமைதி நகரமாக, முக்கியமான நகர்ப்புற மையமாகவும், தொழில்துறை மையமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 



இரக்கமற்ற அமெரிக்கா


அணுகுண்டு வெடிப்பால் கிட்டத்தட்ட 90% நகரத்தை அழித்த போதிலும், அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. ஹிரோஷிமா தாக்குதலின் மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 9ம் தேதி அன்று, அவர்களே ஜப்பானின் நாகசாகி மீது மற்றொரு அணுகுண்டையும் வீசினார்கள். குண்டுவெடிப்பின் விளைவைக் கண்ட பிறகுதான், ஜப்பான் பேரரசர் ஹிரோஹிட்டோ ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வானொலி மூலம் இரண்டாம் உலகப் போரில் நிபந்தனையற்று சரணடைகிறோம் என்று அறிவித்தார். ஜப்பான் மக்கள் பல ஆண்டுகளாக இந்த அணு வெடிப்பின் பின் விளைவுகளை எதிர்கொண்டனர் என்பது வரலாறு.


ஹிரோஷிமா தினம் 2022


இந்த ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் 77 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஹிரோஷிமாவின் நினைவுப் பூங்காவில் அமைதி விழா நடைபெறுகிறது. குண்டுவெடிப்பின் போது இறந்த அப்பாவி உயிர்களுக்கு அஞ்சலி செலுத்த, தாக்குதலில் இருந்து தப்பிய பலர் அங்கு கூடுகிறார்கள். கால்வே அலையன்ஸ் அகென்ஸ்ட் போரின் வருடாந்திர நிகழ்வும் கால்வேயின் ஐர் சதுக்கத்தில் இந்த நாளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.