மானிட்டர் பல்லி என்பது பல்லிகளில் ஒருவகை. பார்ப்பதற்கு முதலை போன்றும் இல்லாமல் பல்லி போன்றும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்டு இருக்கும். அண்மையில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைய முயலும் மானிட்டர் பல்லியின் ஒரு வீடியோ இணையத்தில் பல ரியாக்‌ஷன்களைச் சந்தித்துள்ளது. பலர் அந்த ராட்சத ஊர்வன அமைதியானது  என்று அழைத்தாலும், மற்றவர்கள் அதைப் பார்ப்பதற்கே சங்கடப்பட்டனர். ஜாய்செலின் பென்சன் என்பவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவில், ஒரு மானிட்டர் பல்லி ஜன்னல் வழியாக உள்ளே நுழைய முடியாமல் தொடர்ந்து நுழைய முயற்சிப்பதைக் காட்டுகிறது.




மானிட்டர் பல்லி ஜன்னல் கண்ணாடியில் ஏற கடுமையாக முயற்சிப்பதை வீடியோ மேலும் காட்டுகிறது. பல்லி நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு வீட்டினுள்ளேயே வெறித்துப் பார்ப்பதை கிளிப்பில் காட்டியுள்ளதால், அது உணவு தேடுவது போல் தெரிகிறது. அது கட்டிடத்திற்குள் நுழையும் நோக்கத்துடன் ஊர்ந்து செல்கிறது, சில நிமிடங்களில் அது கீழே விழுகிறது.


இதுவரை, இந்த வீடியோ 2,76,000 பார்வைகளையும், 1,000 க்கும் மேற்பட்ட கருத்துகளையும் மற்றும் பல விருப்பங்களையும் குவித்துள்ளது. அந்த வீடியோவுடன், அதைப் பதிவிட்டவர், தான் இனி எந்த நேரத்திலும் புளோரிடாவிற்கு வரமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார், "அச்சோ! இதைப் பாருங்களே! என் மகன் ஆர்லாண்டோ, ஃப்ளாரிடாவில் வசிக்கிறான். அங்கே அவன் அபோப்காவில் வசிக்கிறான். இன்று அவனைப் பார்க்க யார் வந்திருக்கிறார் என்பதைப் பாருங்கள்! இது ஒரு மானிட்டர் பல்லி! எனக்கு காட்ஜில்லா போல் தெரிகிறது! நான் அவனை இனி எந்த நேரத்திலும் சென்று சந்திக்க மாட்டேன் என்பது உங்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில்லை! அது வீட்டின் முன் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது!" என்றார்.






இதற்கு பல கருத்துகள் குவிந்தபடி உள்ளன. ஒரு பயனர் தனது கருத்தில், "ஓ இது நன்றாக இல்லை! மேலும் அந்தப் பல்லி உணவைத் தேடுவது போல் தெரிகிறது! நீங்கள் புளோரிடாவுக்குச் செல்லமல் இருப்பதே நல்லது!" என்றுள்ளார்.


மற்றொரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், "எனக்குப் பார்க்கவே பயமாக இருக்கிறது- கதவைத் திறப்பது எப்படி என்று அந்தப் பல்லிக்குத் தெரிகிறது.இப்போது அது ஜன்னல் வரை ஏறுகிறது." எனக் கூறியுள்ளார்.


வேறொருவரோ,"நான் உங்களைக் குறைகூற மாட்டேன்.நானாக இருந்தால் நீண்ட நாட்களுக்கு அந்தப் பக்கமே செல்லமாட்டேன். ஒருவேளை இந்தப் பல்லி வரும்போது நீங்கள் வெளியில் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தால் அதைப் பார்த்து நான் மாரடைப்பு வந்தே இறந்துவிடுவேன்" என்று  கருத்து தெரிவித்தார்.


மானிட்டர் பல்லிகள் விஷத்தன்மை கொண்டவை, அவற்றின் கடி மனிதர்களுக்கு ஆபத்தானது அல்ல என்றாலும், அவை நிச்சயமாக வலி மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கும்.