இணைய வைரலில் இடம்பெறும் வீடியோக்கள் சில நேரங்களில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் . அப்படியான ஒரு வீடியோவைத்தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்
எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் தனது மகனை விமானத்திற்கு வரவேற்கும் காட்சிகளை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள் . Flygirl Trigirl என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதற்கு கேப்ஷனாக “ அந்த மிகப்பெரிய விஐபியை கேபினட் குழு வரவேற்று மீண்டும் துபாய்க்கு பறந்தது “ என குறிப்பிட்டுள்ளார்.
விடியோவில் :
போர்டிங் பாஸ் எடுத்த 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் , தனது பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸுடன் விமானத்திற்கு நுழைகிறார். அவரை வரவேற்ற கேபினெட் குழுவை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தயாராக இருக்கிறார். அது அந்த சிறுவனின் தாய் . அம்மாவை கண்டதும் அலட்டிக்கொள்ளாமல் உள்ளே நுழைய முற்படும் சிறுவனிடம் கட்டிக்கொள்ளும்படி கேட்டு , அணைத்துக்கொள்கிறார். காணொளியின் முடிவில் இருவரும் இனிமையாகக் கட்டிப்பிடிப்பதைக் காணலாம். குட்டிப் பையனும் கேமராவை பார்த்து இறுதியாக கை அசைப்பதைக் காணலாம்.
இந்த பதிவு ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கருத்துகளையும் குவித்துள்ளது. நெட்டிசன்கள் கமெண்ட்ஸில் ஹார்ட்ஸ் மற்றும் லவ் ஈமோஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.சமீபத்தில் இதே போன்றதொரு வீடியோவில் கேபினெட் குழுவை சேர்ந்த ஒருவர் , பெண் குழந்தை ஒன்றை தோளில் சுமந்தபடி விமானத்தில் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டிருந்தார். அந்த வீடியோ 170,000 க்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது.