ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் ஒரு பாலத்தை திறந்து வைப்பதற்காக சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அப்போது பாலம் இடிந்து விழுந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி காமா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


 






விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலத்தின் கட்டுமான தரத்தை மக்கள் கேலி செய்து வருகின்றனர். 


மழைக்காலத்தில் உள்ளூர் மக்கள் ஆற்றைக் கடக்க உதவும் வகையில் சிறிய பாலம் கட்டப்பட்டிருக்கிறது. பாலத்திற்கு முன்பு இருந்த அந்த இடத்தில் இருந்த தற்காலிக பாலம் போன்ற கட்டமைப்பு அடிக்கடி இடிந்து விழுந்துள்ளது.


அரசு நிகழ்ச்சியின் போது பாலத்தை முறையாக திறந்து வைப்பதற்காக அலுவலர்கள், அந்த பாலத்தின் மீது நின்று கொண்டிருப்பதை வீடியோவில் காணலாம். பாலத்தின் ஒரு முனையில் உள்ள சிவப்பு ரிப்பனை சிறப்பு விருந்தினர் வெட்டியிருந்தால் திறப்பு விழா முடிந்திருக்கும். ஆனால், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர், அதாவது ஒரு பெண்மணி, ரிப்பனை வெட்ட கத்தரிக்கோலை எடுத்துள்ளார். 


அப்போது, அலுவலர்களின் எடையை தாளாமல் அழுத்தத்தின் காரணமாக பாலம் இடிந்து விழுந்தது. அதிர்ச்சியில், பெண் அலுவலர் ஒருவர் பாலத்திலிருந்து குதிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், அந்தப் பெண்ணை, பாலத்தில் இருந்து மீட்டனர்.


 






மற்ற உறுப்பினர்கள் அனைவரும் பாலத்திலேயே தொங்கி கொண்டிருந்தனர். ஆனால், நல்வாய்ப்பாக அவர் கீழே விழவில்லை. சிக்கித் தவிக்கும் அலுவலர்களுக்கு உதவி செய்ய மற்றவர்கள் உடனடியாக  விரைந்து செல்வதையும் காணலாம். இச்சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இறுதியாக, பாலம் இடிந்து இரண்டாக உடைந்தது.