உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக திகழ்வது ரஷ்யா. அமெரிக்காவுக்கு நிகராக ஒரு நாடு என்றால் அது ரஷ்யா ஆகும். ரஷ்யாவின் நீண்ட கால அதிபராக புதின் உள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது நேட்டோ நாடுகள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன.
மீண்டும் அதிபராகும் புதின்:
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் பதவிக்காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், வரும் 2024ம் ஆண்டு வரும் ரஷ்யாவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் வரும் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று புதினே அதிபராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவை பொறுத்தவரை அதிபர் தேர்தல் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
உலகின் சக்தி வாய்ந்த நாட்டின் அதிபராக திகழும் விளாடிமிர் புதின், உலகின் சக்தி வாய்ந்த நபர்களில் முக்கியமானவராகவும் திகழ்கிறார். கடந்த 1999ம் ஆண்டு ரஷ்யாவின் அதிபராக போரிஸ் எல்ட்சினுக்கு பிறகு பதவியேற்ற அவர், ஜோசப் ஸ்டாலின் போல ரஷ்யாவை நீண்ட காலம் ஆட்சி செய்து வருகிறார்.
உற்று நோக்கும் உலக நாடுகள்:
ஏற்கனவே, கிரௌம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புதின் போட்டியிட முடிவு செய்தால் அவருடன் யாரும் போட்டியிட முடியாது என்று கடந்த செப்டம்பரில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரஷ்யாவின் அடுத்த அதிபராக மீண்டும் புதினே தொடர்வார் என்று தகவல்கள் வெளியாகி இருப்பதை அமெரிக்க உள்ளிட்ட உலகநாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
ரஷ்யாவின் அதிபராக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழுமு் புதின் தன்னுடைய அதிபர் காலத்தில் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா, டிரம்ப், பைடன் என 5 அமெரிக்க அதிபர்களை பார்த்தவர். உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தற்போது 71 வயதான புதின் இன்னும் ஆறு ஆண்டுகள் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவின் அதிபராக புதின் நீடிப்பது தொடர்பாக அந்த நாட்டில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. புதினை அந்த நாட்டில் தற்போது தீவிரமாக எதிர்த்து வரும் அலெக்சி நாவல்னி தற்போது சிறையில் உள்ளார்.