இணையம் வளரவளர சமூகத்தில் எங்கோ ஓர் மூலையில் நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களும் மிக விரைவாக உலகை நிரப்பி விடுகின்றன. உலகில் சீனாவிற்கு (953.55 மில்லியன்)அடுத்து அதிகப்படியான ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டளர்களைக் கொண்டுள்ள இந்தியா (492.78) போன்ற நாடுகளில் மிக விரைவாகவே ஒவ்வொரு சுவாரஸ்யமான விசயங்களும் இணையத்தினை நிரப்பிவிடுகின்றன. 2019ல் உலகினையே திரும்பி பார்க்க வைத்த #pray_for_nesamaiயை நம்மால் மறக்க முடியுமா?
இணைய மோகம் அதிகமாக அதிகமாக மக்களின் ஒவ்வொரு அசைவும் பதிவு செய்யப்படுவதுடன் அதில் வேடிக்கையானவை இணையவாசிகளின் ஈர்ப்பைப் பெறுபவை உலகப்புகழ் பெறுகின்றன. இன்ஸ்டாகிராமில் உள்ள viralhog எனும் பக்கத்தில் சமீபத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொடுக்க முயற்சி செய்கையில் நடந்த சம்பவம் தான் வீடியோ வைரலாக முக்கிய காரணமாக இருக்கிறது. முதலில் குதிப்பதற்கு தயாராக இருந்த தனது குழந்தையின் நீச்சல் உடையினை சரிபார்த்த அவர், பின்னர் தனது குழந்தையுடன் குதிக்க தயாரானார். ஆனால் இருவரும் ஒன்றாக குதிக்க முயன்றுகொண்டு இருக்கையில் Are you ready? என்று கேட்கும்போதே அந்த பெண் நிலைதடுமாறி நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டார். இதனை வீடியோவாக பதிவு செய்தவர் அதனை சமூக வளைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவின் சுரஸ்யத்தினை உணர்ந்த viralhog எனும் இன்ஸ்டாகிராம் பக்கம் வீடியோவினை, ”நீச்சல் குளத்தில் அதன் போக்கிலேயே தவறி விழுவதும் அழகானது” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளது.
வீடியோ பகிரப்பட்ட சிறிது நேரத்தில் இணையவாசிகளின் ஈர்ப்பினை பெற்றுள்ளது. இதுவரை நாற்பத்து ஏழாயிரத்து முன்னூறு பேர் இந்த வீடியோவினை பார்த்துள்ளனர். Viralhog எனும் இன்ஸ்டாகிராம் பக்கமானது இரண்டு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் ஃபாளோவர்களைக் கொண்டுள்ளது. இதுவரை உலகெங்கிலும் நடந்த இரண்டாயிரத்து ஆறநூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை பகிர்ந்துள்ளது. மிகவும் சுவாரஸ்யமான வீடியோக்கள் உங்களிடமும் இருந்தால் இந்த பக்கத்தில் பதிவிடலாம். வீடியோவின் வரவேற்பினைப் பொறுத்து viralhog பக்கத்திலிருந்து பணமும் கொடுக்கப்படுகிறது. இனி வீடியோவினை பகிர்ந்து இணையவாசிகளின் கவனத்தினை ஈர்ப்பதுடன் பணமும் பெறலாமே.