வன உயிரிகள் பேராபத்தில் சிக்கிக்கொள்வதும், அதனை வன ஆர்வலர்கள், வன உயிரி பாதுகாவலர்கள் அவைகளை காப்பாற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்படுவது வழக்கம். ஏனெனில், ஓர் உயிர் தொடர் போராட்டத்திற்கு பிறகு சிக்கலில் இருந்து மீட்கப்படுவதென்பது மிகவும் ஆனந்தமான ஒன்று. இந்தமுறையும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
தாய்லாந்து நாட்டில் குட்டி யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துவிட்டது. அருகில் அதன் தாய் யானை தன் குட்டியை மீட்க போராடி வருகிறது. வன உயிர் பாதுகாவலர்கள் எப்படி குட்டியை மீட்டனர் என்ற வீடியோ அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
தாய்லாந்து நாட்டில் Nakhon Nayok மாகாணம் அருகே Royal Hills golf course பகுதியில் விவசாய நிலம் அருகே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் குட்டி யானை தவறி விழுந்துவிட்டது. அருகில் அம்மா யானையும் தனது குட்டியை மீட்க போராடியது. இதை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்துவிட்டு, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
மீட்புப் பணியில் Khao Yai National Park- ஐ சேர்ந்தவர்கள், கால்நடை மருத்துவர்கள், மட்டும் வனத்துறையைச் சேர்ந்த பல ஈடுப்பட்டனர். தாய் யானை அருகில் இருந்ததால், குட்டி யானையிடன் அவர்களால் நெருங்க முடியவில்லை. மீட்க வந்தவர்களைப் பார்த்து தாய் யானை மிரண்டது. அதனால், தாய் யானைக்கு மயக்க மருத்து வழங்கப்பட்டது. ஆனாலும், மருந்து வேலை செய்வதற்குள், தாய் யானை குட்டியிடமே சென்றுவிட்டது.
டிரக் உள்ளிட்ட பல்வேறு மெஷின்களைக் கொண்டு மீட்பு பணி நடைபெற்றது. மூன்று மணி நேர மீட்புப் பணிக்கு பிறகு குட்டி யானை பத்திரமாக மீட்கப்பட்டது. தாய் யானையை நினைவிற்கு கொண்டுவர அதற்கு CPR சிகிச்சை வழங்கப்பட்டது.
Khao Yai National Park-ஐ சேர்ந்த கால்நடை மருத்துவர் Chananya Kanchanasarak, இதுகுறித்து கூறுகையில்,” தாய் யானை இருக்கும்போது, குட்டியின் அருகில் செல்வது சாத்தியமற்றதாய் இருந்தது. அதனால்தான், தாய் யானைக்கு மயக்க மருந்து வழங்கப்பட்டது. எப்படியோ, இறுதியாக குட்டியை பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்துவிட்டோம்.” என்றார்.
யானையும் குட்டியும் பத்திரமாக காட்டுக்குள் சென்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்