Viral Video : அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சூடான் அதிபர், கால் சட்டையில் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


சூடான் அதிபர்


வடக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் அதிபர் சல்வா கீர் மயர்டிட் (71). ஜூலை 2011-ஆம் ஆண்டில் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றதில் இருந்து சல்வாகீர் மயர்டிட் இந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி புதிதாக கட்டப்பட்டிருக்கும் சாலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் அதிபர் சல்வா கீர் மயர்டிட் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


அப்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அந்நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  அப்போது தேசிய கீதத்தை பாடி கொண்டிருந்த அதிபர் சல்வா கீர் மயர்டிட் கால் சண்டையுடன் சிறுநீர் கழித்துள்ளார். இந்த வீடியோவானது அங்கிருக்கு சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒளிபரப்பபடவில்லை என்றாலும், இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியுள்ளது.






இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கருத்துகளையும், அதிபரின் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 


பத்திரிகையாளர்கள் கைது


இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர். அதிபர் சிறுநீர் கழித்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டதாக கூறி  பத்திரையாளர்கள் ஜோபல் டோம்பே, விக்டர் லாடோ, ஜோசப் ஆலிவர், ஜேக்கப் பெஞ்சமின், முஸ்தபா ஒஸ்மான், செர்பெக் ரூபன் ஆகிய 6 பேரை ரகசிய உளவு  அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கைது நடவடிக்கைக்கு தெற்கு சூடான் ஊடகவியலாளர் குழு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்ததுடன், அவர்கள் வெளியே வந்ததும் உரிய பாதுகாக்கும் அளிக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Senegal Accident : செனகலில் சோகம்.. பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து...40 பேர் உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய நாடு..