சக்காரி என்பவர் அவரது தட்டு தடுமாறி நடக்கும் பெண் குழந்தை மேடிசனுடன் ஒரு கடையில் நிற்கிறார். அப்போது ஒரு குழந்தை அழுகிறது என்று சைகை மொழியைப் பயன்படுத்தி அந்த குழந்தை அவர் தந்தையிடம் கூறியதும் சக்காரி பிரமிப்பில் ஆழ்ந்தார். @oursignedworld என்ற அவரது அக்கவுண்டில் இருந்து இந்த வீடியோ வெளியிட பட்டுள்ளது. அவர் அந்த வீடியோவை வெளியிட்டு "நான் காது கேளாதவன், என் மகளுக்கு காது கேட்கும். ஆனால் முதன் முறையாக எனக்காக எனக்கு புரிவதற்காக சைகை மொழியில் என்னுடன் பேச முயற்சித்துள்ளார்" என்று அந்த பதிவில் எழுதி இருந்தார்.



வீடியோவில், சக்கரியும் மேடிசனும் ஒரு பல்பொருள் அங்காடி வழியாக நடந்து செல்வதைக் காணமுடிகிறது, அந்த குழந்தை திடீரென்று அவள் கையில் வைத்திருந்ததைக் கீழே தவற விடுகிறாள். 'குழந்தை அழும் சத்தம் கேட்கிறது' என்று தன் அப்பாவிடம் செய்கையில் செய்து அந்த அழும் குழந்தை இருக்கும் திசையைக் காட்டுகிறாள். சக்கரி மேடிசனின் சைகையை பார்த்து அதிசயித்து திரும்பக் கேட்டார். "குழந்தை அழுகிறதா?" என கேட்க, அவள் கீழே விழுந்த பொருட்களை எடுக்க குனிந்தாள். "அவள் தன் கைகளில் இருந்ததைக் கீழே விட்டு, குழந்தை அழுகிறது என்று சைகை செய்துவிட்டு, மீண்டும் விழுந்த பொருளை எடுத்துக்கொண்டாள்! இது ஒரு அற்புதமான தருணம்" என்று அந்த அப்பா எழுதியுள்ளார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த பொன்னான விடியோ 19.6 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.



மேடிசன் தனது அப்பாவுக்கு விளக்கம் அளித்தது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கமென்ட் பாக்சில் ஒரு பயனர் கூறினார், "ஆஹா! அவள் கேட்டதை மட்டும் வெறுமனே சைகையிட்டு காட்டவில்லை, அவர் தந்தையால் கேட்க முடியாது என்பதை அவள் உணர்ந்திருக்கிறாள். நம்பமுடியாத அளவுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது." என்று எழுதியிருந்தார்.


மற்றொருவர் "புத்திசாலியான குட்டிப் பெண். அவள் இரண்டு மொழிகளை ஒன்றாகக் கற்றுக்கொள்கிறாள், அவள் உலகில் தொடர்பு கொள்ளும்போது இரண்டு மொழிகளையும் இணைக்கிறாள். சூப்பர் சிறுநடை போடும் குழந்தை!" என்று எழுதியிருந்தார். சக்காரி மற்றும் அவரது மனைவி கர்ட்னி, தங்கள் மகளுக்கு ஒரே நேரத்தில் சைகை மொழியைப் பேசவும், கேட்கவும், பயன்படுத்தவும் கற்றுக்கொடுக்கிறார்கள். "நாங்கள் ஒரு குடும்பமாக ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள சைகை மொழியைப் பயன்படுத்துகிறோம், ஆனால் மேடிசனும் நானும் பேசும்போது ஆங்கிலத்தையும் பயன்படுத்துகிறோம்" என்று கோர்ட்னி அவர்களின் YouTube சேனலில் கூறினார்.