இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடித்த திரைப்படம் கஜினி.  2005ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் கொண்ட  கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார். சிறிது நேரம் மட்டுமே ஞாபகம்  வைத்துக்கொள்ளும் சூர்யா நினைவில் வைத்துக்கொள்வதற்காக டைரியிலும், தன்னுடைய உடம்பிலும் அனைத்தையும் குறித்து வைத்துக்கொள்வார்.


வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட கஜினி படம் தமிழில் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அதனையடுத்து இப்படம் ஹிந்தியிலும் ரீமேக்கானது. அமீர் கான் நடித்திருந்த ஹிந்தி கஜினியும் பெரும் வெற்றி பெற்றது.




இந்நிலையில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த டேனியல்  ஸ்கிமித் என்பவர் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸோடு வாழ்ந்துவருகிறார். அவருக்கு 6 மணி நேரம் மட்டுமே ஞாபக சக்தி இருக்கிறது.


டேனியல் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார். தன்னுடைய அனுபவங்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,  "போக்குவரத்து நெரிசலில் மோட்டார் சைக்கிளில் இருந்தேன். அப்போது பின்னால் ஒரு கார் 128 கி.மீ வேகத்தில் வந்தது. அந்தக் காரின் ஓட்டுநர் போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்ளவில்லை.  அந்தக் கார் என் மீது மோதியது.


நான் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டேன். எனக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். அதுமட்டுமின்றி மூன்றாம் நிலை TBI (traumatic brain injury) ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். அதன் காரணமாக  நீண்ட கால நினைவுகளை உருவாக்கும் திறனை நான் இழந்தேன். இந்த விபத்து எனது வாழ்க்கையை திருப்பிப்போட்டது. நினைவுகளை அடிக்கடி இழந்ததால் நண்பர்களை இழந்தேன்” என்றார்.


டேனியல் ஸ்கிமித்துக்கும்,  கத்ரீனா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தான். ஆனால் அவன் பிறந்ததுகூட தற்போது எனக்கு நினைவில் இல்லை” என்கிறார் டேனியல். அதுமட்டுமின்றி, அனைத்து நிகழ்வுகளையும் டைரியில்தான் எழுதி வைத்துக்கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: பெண் கைதியை நிர்வாணப்படுத்தி, நடனமாடவைத்து வீடியோ எடுத்த பெண் போலீஸ்.. அடுத்தடுத்து அதிர்ச்சி


அமெரிக்காவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்திய மாணவி.. உறுப்பு தானத்துக்கு முன்வந்த பெற்றோர்.. நெகிழ்ச்சி சம்பவம்..