கரெண்ட் இல்லை, இன்டர்நெட்டும் கிடையாது. ஆனால் வீட்டின் விலை மட்டும் ரூ.5.5 கோடி. என்ன விளையாடுறீங்களா எனக் கேட்காதீங்க. உண்மையிலேயே இந்த வீட்டுக்கு இதுதாங்க விலை.


எங்கே எனக் கேட்கிறீர்களா? பிரிட்டன் நாட்டில் டெவான் எனும் பகுதியில் தான் மலை உச்சியில் இந்த வீடு இருக்கிறது. வீட்டின் உரிமையாளர் இந்த வீட்டுக்கு 550,000 யூரோ என விலை நிர்ணயித்துள்ளார். 


இந்த வீடு கடற்கரை ஓரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் இருக்கும் மசாண்ட்ஸ் பீச் புகழ்பெற்றது. இந்த வீட்டில் இரண்டு பெரிய படுக்கை அறைகள் உள்ளன. ஒரு ஓய்வு அறை. உணவருந்தும் அறை ஒன்றும் இருக்கின்றன. முகப்பில் வராண்டா ஒன்றும் இருக்கிறது. இவை தவிர கூடுதலாக இரண்டு படுக்கை அறைகள் உள்ளன. குளியலறை இருக்கிறது. சமையலறை இல்லாமல். எல்லா வசதியும் கொண்ட சமையலறையும் இருக்கிறது.


பல பர்னர்கள் கொண்ட அடுப்பு இருக்கிறது. காஸ் குக்கரும் இருக்கிறது. விளக்குகள் எல்லாம் எல்பிஜி காஸ் மூலமே இயங்குகின்றன. சமைக்க தண்ணீர் எனக் கேட்கலாம், மழை நீர் சேகரிப்புத் தொட்டி உள்ளது. அங்கே சேமிக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய்களில் வரும் அதுதான் குடிக்க, குளிக்க, சமைக்க என எல்லாவற்றிற்கு. நீச்சல் குளம் தேவையில்லை. ஏனென்றால் வீட்டிலிருந்து இறங்கி சில அடிகள் எடுத்துவைத்தால் போதும் கடல் வந்துவிடும்.




அதைவிட இந்த பங்களாவுக்கு அருகிலேயே ஒரு சிறு ஓடை வருகிறது. அதிலும் நீந்தி குதூகலிக்கலாம். வீட்டின் உரிமையாளர் மிச்செல் ஸ்டீவென்ஸ், இந்த வீட்டின் அம்சங்களை விவரித்து இணையதளங்களில் விளம்பரம் செய்துள்ளார். அப்புறம் வீட்டிலிருந்து கார் பார்க்கிங்குக்கு 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். இது இந்த வீட்டை வாங்க வருபவர்கள் பலரும் கருத்து பெரிய பின்னடைவாக இருக்கிறது. ஆனாலும் விற்பனையாளர் இதில் சமரசம் இல்லை எனக் கூறுகிறார்.


அன்றாட நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விடுபட்டு முற்றிலும் எளிமையான இயல்பான வாழ விரும்புவோருக்காகவே இந்த பங்களா என்றும் அவர் கூறுகிறார். வீட்டை விற்பனை செய்வதற்கு உரிமையாளர் மிச்செல் ஸ்டீவென்ஸ் பலப்பல நிபந்தனைகளும் வைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.