பாரம்பரிய மருத்துவ முறைகள் நல்வாழ்வு மற்றும் நல்ல சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, எனவே இந்த பகுதியில் ஆராய்ச்சி வேகமானதாகவும் மாறிவரும் தேவைகளுக்கு பதிலளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். பாரம்பரிய மருத்துவ பயிற்சியாளர்களுக்கு இடையே மட்டுமல்ல, பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவத்திற்கும் இடையேயும் ஒத்துழைப்பு இருப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
“உதாரணமாக, நான் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) டைரக்டர் ஜெனரலாக இருந்தபோது, டெங்கு சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஆயுஷ் அமைச்சகத்துடன் நாங்கள் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டோம். பல நிறுவன ஆய்வுகள் மற்றும் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளுடன் ஒத்துழைப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது,” என்று காந்திநகரில் நடைபெற்ற உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் கண்டுபிடிப்பு உச்சிமாநாட்டில் ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்கான ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்துவது குறித்த கருத்தரங்கத்தில் உரையாற்றும் போது மருத்துவர் சௌமியா கூறினார்.
"நமது வளங்கள், தரவுகள், ஒத்துழைப்புகள், நன்கு வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் தொழில்முனைவோரை ஆதரிக்கும் கொள்கைகள் ஆகியவை நாம் கட்டமைக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்", எனக் கூறிய அவர் பொது சுகாதார தலையீடுகளாக நல்ல ஆராய்ச்சிகள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்றும் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மருத்துவர் சௌமியா அறிவுறுத்தியுள்ளார்.
ஆராய்ச்சி ஆய்வுகளுக்கான புதுமையான சோதனை வடிவமைப்புகளைப் பற்றி சிந்திப்பது முக்கியம், பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளுக்கு அர்ப்பணிப்புள்ள ஆராய்ச்சி எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு எடுத்துக்காட்டு என்று டாக்டர் சௌமியா கூறினார்.
மற்றொரு பக்கம் குஜராத் மாநாட்டில் பேசிய ஆயுஷ் தலைவர் டாக்டர் பூஷன் பட்வர்தன் நவீன அறிவியலுடன் கூடிய பாரம்பரிய மருந்துகள் சிறந்த சுகாதாரத்திற்கு வழி வகுக்கும் என்றார். உலகசுகாதார மையத்தின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் ஜாம்நகரின் நடத்திய உச்சிமாநாட்டின் போது பத்திரிகைகளிடம் பேசினார். அப்போது பேசிய ஆயுஷ் தேசிய ஆராய்ச்சி பேராசிரியரான டாக்டர் பட்வர்தன், உலக சுகாதார அமைப்புக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான கூட்டு மிகவும் முக்கியமானது என்றார். "இந்த மையத்தில், பல நாடுகள் ஒரு பொது நலனுக்காக ஒன்று சேரும், இதன்மூலம் சான்று அடிப்படையிலான ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான புதிய வழிமுறை விரைவாக முன்னேறும். பாரம்பரிய மருத்துவத்தின் பல்வேறு அம்சங்களில் பணிபுரியும் நாடுகள் ஒன்றிணைந்து புதுமைகளை உருவாக்கும் ஒரு கூட்டமைப்பை உருவாக்குவோம்” என்று அவர் கூறினார்.