உலகெங்கும் நடக்கும் பல விஷயங்கள் டிஜிட்டல் உலகத்தில் நம்மை வந்து உடனே சேர்ந்து விடுகிறது. பல வீடியோக்கள் நேர்மறையான எண்ணங்களை நமக்குள் விதைத்து விடுகிறது. இப்படியும் மக்கள் இருப்பார்களா என்ற எண்ணம் நமக்குள் ஏற்படும் அளவுக்கு உலகத்தில் பலர் நேர்மறையாகவும், மனித நேரத்துடனும் நடந்து கொள்கிறார்கள். அப்படியான ஒரு நேர்மறையான ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூபர் ஒருவர் சாண்டிவிச் கடையில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ள அந்த வீடியோதான் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.  


தாய்லாந்தைச் சேர்ந்த அந்த யூடியூபர் சாண்ட்விச் கடைக்கு  செல்கிறார். அங்கு நின்றுகொண்டிருக்கும் ஓனரிடம் எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா எனக் கேட்கிறார். உடனடியாக என்னிடம் பணமும் இல்லை எனவும், தன்னால் பணம் தர முடியாது எனவும் சொல்கிறார். அதைக்கேட்டுக்கொண்டே ஒரு கிளாஸ் தண்ணீரையும் அவர் கொடுக்கிறார். அதைக்குடித்துக்கொண்டே எனக்கு ஒரு சாண்டிவிச்சும் தாருங்கள். பணத்தை நான் 30 நிமிடங்களுக்கு பிறகு தருகிறேன் எனக் கூறுகிறார்.  அதற்கும் அந்த ஓனர் சரி.. பரவாயில்லை. பிறகு தாருங்கள் எனக் கூறுகிறார்.  






இதனைக் கேட்டு நெகிழ்ச்சியான அந்த யூடியூபர் என்னை ஏன் எதை வைத்து நம்புகிறீர்கள் எனக் கேட்கிறார். பார்ப்பதற்கு நீங்கள் நம்பிக்கை உரியவராக இருக்கிறீர்கள் என்கிறார். இதனைக் கேட்டு சிரித்துக்கொண்டே கடையை நடத்துவதில் என்ன பிரச்னை இருக்கிறது எனக் கேட்கிறார் யூடியூபர். அதற்கு கடையின் வாடகை மிக அதிகம் என்கிறார் ஓனர். 


இதையெல்லாம் பேசிக்கொண்டே 500 டாலர் பணத்தை கடை ஓனருக்கு டிப்ஸாக கொடுக்கிறார் யூடியூபர்.  கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 38,000 ஆகும். இவ்வளவு பணத்தை கண்டதும், என்ன நடக்கிறது என ஆச்சர்யத்துடன் பார்க்கும் ஓனர் இது உண்மைதானா என ஆர்வத்துடன் அந்த பணத்தை வாங்கிக் கொள்கிறார்.


இந்த வீடியோ 3 மில்லியனை பார்வையாளர்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. பலரும் வீடியோவை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளனர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண