புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் (Will Smith), தனது மனைவி ஜடா பிங்கெட் (Jada Pinkett) பற்றி கேலி செய்ததற்காக ஆஸ்கர் விருது நிகழ்வில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை (Chris Rock)  கன்னத்தில் அறைந்தார். இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 


ஆஸ்கர் விருதுகள் நிகழ்வு தொடங்கி சிறிது நேரத்தில், கிறிஸ் ராக் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்க மேடைக்கு வந்தார். அப்போது அவர் வில் ஸ்மித் மனைவி ஜடா, GI ஜேன் 2 திரைப்படத்தில் நடிக்க தலை முடி முழுவதையும் எடுத்து விட்டார். அவரது மொட்டையடிக்கப்பட்ட தலையை பற்றி கிறிஸ் ராக் கேலி செய்தார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித  கிறிஸ் ராக்கை திட்டினார். பின்னர், அவர் சிறந்த நடிகருக்கான விருது வழங்கியபோது., மேடைக்கு சென்றவர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட்டிற்கு (Jada Pinkett) அலோபெசியா (alopecia) என்ற நோயால் பாதிப்பட்டதால், ஏற்கனவே முடி கொட்டும் பிரச்சினை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதைக் கேலிக்குள்ளாகி பேசியதால் வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அறைந்தார்.






பின்னர், வில் ஸ்மித் தனக்கு விருது வழங்கப்பட்டபோது பேசுகையில், “ நான் என்றைக்கும் அன்பு மற்றும் அக்கறைக்கான தூதனாக இருக்க விரும்புகிறேன். நான் இப்படி நடந்து கொண்டததற்காக ஆஸ்கர் விழா குழுவினர், மற்றும் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.’ என்றார்.


மேலும், ரிச்சர்ட் வில்லியம்ஸைப் பற்றி கூறுகையில், அன்பு உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்ய வைக்கும்," என்று அவர் கூறினார்.


ஆஸ்கர் விருது  விழாவில் தொகுப்பாளரை அறைந்ததற்காக ஆஸ்கர் குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட, வில் ஸ்மித் அவருடைய உரையில், கிறிஸ் ராக் பெயரைக் குறிப்பிடவில்லை. அவர் கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் இன்னும் நெகிழ்ச்சியான நிகழ்வாக இருந்திருக்கும் என உலக அளவில் சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் டிவிட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.


 




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண