வியட்நாம் நாட்டில் வீசிய யாகி புயல் காரணமாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தாலும் அந்த நாடே பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. நாட்டின் தலைநகர் ஹானோய் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதுவரை 226 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



புயலிலும் மாறாத மனிதநேயம்:


புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் அந்த நாட்டு மீட்பு படையினரும், அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், புயல் வீசியபோது சாலையில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு  ஆளாகினார். அப்போது, பாலம் ஒன்றின் மேலே சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் புயல் தீவிரமாக வீசியதால் தனது ஸ்கூட்டியை ஓட்ட முடியாமல் அவதிப்பட்டார்.






குவியும் பாராட்டு:

அப்போது, அதே பாலத்தின் மீது அதே திசையில் வந்த இரண்டு கார்கள் அந்த ஸ்கூட்டியின் இரு புறமும் கவசம் போல நின்று புயல் காற்று அந்த ஸ்கூட்டி ஓட்டுனரை பாதிக்காத வகையில் தடுத்தனர். மேலும், அவர் ஸ்கூட்டியை இயக்கும் விதத்திற்கு ஏற்ப இவர்களும் கார்களை மெதுவாக இயக்கி அவர் பாலத்தில் இருந்து இறங்கும் வகை உடன் சென்றனர்.


இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். பெரும் புயலிலும் சுயநலமாக செயல்படாமல் அடுத்தவர் நலன் பற்றியும் சிந்தித்து அவருக்கு உறுதுணையாக நின்ற அந்த கார் ஓட்டுனர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.