கொழும்பில் உள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அங்கு உயர் பாதுகாப்பு பதுங்கு குழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
கோபத்தின் உச்சக்கட்டில் இருந்த போராட்டக்காரர்கள், மாளிகையை முற்றுகையிடுவதற்கு சற்று முன்புதான் சனிக்கிழமை அன்று தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து ராஜபக்சே வெளியேறியுள்ளார்.
இதற்கிடையே, போலி அலமாரியின் பின் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அடிதளத்திற்கு வழி ஒன்று செல்கிறது. லிஃப்ட் மூலம் அடிதளத்திற்கு செல்லும் வகையில் பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், போராட்டக்காரர்களால் பதுங்கு குழியின் கனமான கதவை திறக்க முடியவில்லை.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என போராட்டாக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்குள் நுழைந்த மற்றுமொரு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
மாளிகையின் வாயிலை முற்றுகையிட்ட பிறகு, ராஜபக்சவின் வீட்டிற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். உள்ளே போன போராட்டக்காரர்களில் சிலர் ராஜபக்சேவின் படுக்கையில் விளையாடுவது போன்ற புகைப்படங்களும் வெளியாகின. அவர்களில் சிலர் நீச்சல் குளத்தில் குளிப்பது போலவும் கேமராவில் பதிவாகியுள்ளது. பலர் மாளிகையின் அறையில் ஓய்வெடுப்பதைக் கூட காண முடிந்தது.
இலங்கை சபாநாயகர் வீட்டில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இணையம் வழியாக கலந்து கொண்டனர். அதில், அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட ரணில் பிரதமர் பதவியிலிருந்து விலக மறுப்பு தெரிவித்துள்ளதாக எம்பி ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், பெரும்பான்மை தலைவர்களின் கோரிக்கையின்படி பதவி விலக பிரதமர் மற்றும் அதிபருக்கு சபாநாயகர் கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.
முன்னதாக, அரசியலமைப்பின்படி தற்காலிக அதிபராக சபாநாயகரை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து கட்சி அரசை அமைக்க தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இறுதியாக, அதிபரும் பிரதரும் பதவி விலக ஒப்பு கொண்டனர். முன்னதாக, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு மதிப்பளிப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்