ரஷ்யாவில் மெக்டொனால்டுக்குப் பதிலாக வந்த துரித உணவகம், உருளைக்கிழங்குகளின் பற்றாக்குறை காரணமாக மெனுவில் இருந்து பொரியல்களை தற்காலிகமாக நீக்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததை தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறியது. வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்தியை ஈடுகட்ட பல உள் நாட்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கின. அந்த வகையில், மெக்டொனால்டுக்கு பதிலாக Vkusno i Tochka என்ற உணவகம் சந்தையில் இறங்கியது.
இது தொடர்பாக Vkusno i Tochka நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், 2021ஆம் ஆண்டு, பொரியல் செய்ய தேவையான உருளைக்கிழங்கில் மோசமான அறுவடை இருந்தது. இப்பிரச்சனை தொடர வாய்ப்புள்ளது.
நாட்டு உருளைக்கிழங்குகள் சில கிளைகளில் கிடைக்காமல் போகலாம். பொதுவாக ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து உருளைக்கிழங்கு கிடைக்கும். ஆனால் வெளிநாட்டில் இருந்து தற்காலிகமாக காய்கறிகளை பெற முடியவில்லை. உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை காரணமாக இது நிகழ்ந்துள்ளது.
இது மெக்டொனால்டு நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறி நிறுவனத்தை ரஷ்ய தொழிலதிபர் அலெக்சாண்டர் கோவருக்கு விற்கத் தூண்டியது. இருப்பினும், உருளைக்கிழங்கு பற்றாக்குறை பிரச்னையை ரஷ்ய விவசாய அமைச்சகம் மறுத்துள்ளது. இதுகுறித்து டெலிகிராமில், "உருளைக்கிழங்கு போதுமான அளவு உள்ளது.
ரஷ்ய சந்தையில் பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு உள்பட அனைத்தும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, புதிய அறுவடையிலிருந்து பயிர்கள் ஏற்கனவே வந்துவிட்டன. எனவே, பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பே இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மெக்டொனால்டு வெளியேறியதைத் தொடர்ந்து, கடந்த மாதம் திறக்கப்பட்டதில் இருந்து ‘Vkusno i Tochka' நிறுவனம் சில சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், அங்கு விற்கப்பட்ட பர்கர்களிலிருந்து பூச்சிகள் வெளியேறுவது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்