Train to Busan தொடங்கி All of ur are dead வரை ஏற்கெனவே இறந்த மனிதர்கள் ஜாம்பிக்களாக பிறரைத் தாக்கி நோய் பரப்பும் திரைப்படங்கள், சீரிஸ்களில் பார்த்து சலித்து விட்டோம்.


ஆனால் செத்தும் சாகாமல் ஜாம்பிக்கள் போன்ற உயிரினங்கள் நிஜ வாழ்விலும் உலாவுகின்றன என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வீடியோவைப் பார்த்த பிறகு நம்புவீர்கள்.


கொல்லைப்புற ஜாம்பிக்கள்


ஜாம்பிக்கள் என்றதும் மனிதர்களை மட்டுமே கற்பனை செய்யத்தேவையில்லை, பதிலாக நம் கொல்லைப்புறத்தில் உள்ள பூச்சிகளை உற்று நோக்கினால் நாமும் ஜோம்பிக்களை அடையாளம் காணலாம் என சொல்கிறார் நெட்டிசன் ஒருவர்.


இவர் ஒருவர் பகிர்ந்துள்ள ஜாம்பி போன்று இயங்கும் பூச்சிகளைப் பற்றிய வீடியோ காண்போரை அச்சுறுத்தி வைரலாகியுள்ளது.


”இது ஒரு ஜாம்பி பூச்சி. இது உயிருடன் இல்லை எனினும் சாகவுமில்லை. இந்த உலகில் பிற உயிரினங்களைத் தாக்கி அவற்றின் மூளையைக் கட்டுப்படுத்தும் பூஞ்சைகள் ஏராளம் உள்ளன. அப்படி பூஞ்சையால் தாக்கப்பட்டு சாகாமலும், உயிரற்றும் இயங்கும் பூச்சிகள் இவை " எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.


 






இந்த வீடியோ காண்போரை பதட்டத்துக்குள்ளாக்கி வரும் நிலையில், 10 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.


நெட்டிசன்கள் வாதம்


பாதி உடம்பு, இறக்கை இல்லாமலும், முற்றிலும் வயிறே இல்லாமலும் இயங்கும் இந்தப் பூச்சிகளின் வீடியோ காண்போரை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில் இணையவாசிகள் அறிவியல்பூர்வமாக இந்த வீடியோவில் கமெண்ட் செய்து விவாதித்து வருகின்றனர்.


 






மேலும் சிலர் பாதி உடம்பு இல்லாமல் இயங்கும் பூச்சி ஏதேனும் பறவை தாக்குதலில் இருந்து தப்பி வந்திருக்கலாம், இது இன்னும் உயிருடன் தான் உள்ளது என்றும் நெட்டிசன்கள் எதிர்வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.