சமீப காலங்களாக விமானங்கள் அடிக்கடி கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கும் போது விபத்திற்கு உள்ளாகி விடுகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் மியாமி நகரில் நேற்று முன் தினம் சிறிய வகை விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. 


அமெரிக்காவின் மியாமி நகரில் நேற்று முன் தினம் சிறிய வகை விமானம் ஒன்று 3 பேருடன் பறந்துள்ளது. அந்த விமானம் திடீரென்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது அந்த சிறிய விமானம் ஹவுலோவர் இன்லட் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தரையிறங்கியுள்ளது. அந்த நேரத்தில் அப்பாலத்தில் சென்று கொண்டிருந்த எஸ்யூவி கார் ஒன்று மீது மோதியது. இதன்காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 






இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற 5 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் விமானம் மோதிய பிறகு தீ பிடித்த கார் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


இந்த விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி செசஸ்சனா 172 ரக எஞ்சின் கொண்ட இந்த சிறிய வகை விமானம் கோளாறு காரணமாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 36 வயதான விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக ரேடார் தரவுகள், உள்ளூர் வானிலை நிலவரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானம் மோதிய கார் ஒன்றில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண