சமூக வலைதளங்களில் குழந்தை தொடர்பான வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக அந்த குழந்தை குறும்பு தனம் மற்றும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் செய்வது போல் வீடியோ இருந்தால் அது நிச்சயம் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “குழந்தை ஒன்று அங்கு இருக்கும் பாதுகாவலரிடம் சென்று தனக்கு வெப்ப பரிசோதனை செய்யுமாறு கேட்கிறது. அதன்பின்னர் அந்த பாதுகாவலர் தேவையான வெப்ப பரிசோதனையை செய்கிறார். அதைத் தொடர்ந்து அந்த குழந்தை தான் கையில் வைத்திருந்த பொம்மைக்கும் வெப்ப பரிசோதனை செய்யுமாறு கோரிக்கை விடுகிறது. அதற்கும் அந்த பாதுகாவலர் ஒற்று கொண்டு பரிசோதனை செய்கிறார்” இவ்வாறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவில் அந்த குழந்தை கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வளவு அக்கரை காட்டுகிறது என்று பலரும் பாராட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றிற்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதை தான் இந்த குழந்தை அந்த நபர்களுக்கு நினைவூட்டுகிறது.
இவ்வாறு இந்த குழந்தையின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க: கிஸ் கேட்டதும் க்யூட்டான சத்தத்துடன் முத்தமிடும் கிளி.. வைரல் வீடியோ!