இணையம் அவ்வபோது சேட்டைகள் செய்யும் பறவைகள், விலங்குகள் ஆகியவற்றால் நிரம்புவது வழக்கம். க்யூட்டாக அவை செய்யும் விஷயங்கள் பலருக்கும் பிடிக்கும் என்பதால் அதைப் பரவலாகப் பகிர்வார்கள். அப்படித்தான் பிரேசிலில் ட்ராஃபிக் கேமராவுடன் ஒளிந்து பிடித்து விளையாடுகிறது ஒரு கிளி. கேமரா முன்பு வந்து அது எட்டி எட்டிப் பார்ப்பது அழகாக இருக்கிறது. 


இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் சாலை நிர்வகிக்கும் துறைப் பகிர்ந்துள்ளது. 






முன்னதாக சாண்டியாகோவில் வித்தியாசமாக சத்தமிடும் பறவையின் வீடியோ வைரலானது. அது ஏதோ சந்தோசத்தில் பறவைக் கத்துவது போல இருக்கிறது. 






மற்றொரு கிளி பீகபூ என கத்துகிறது. முத்தம் எனக் கேட்டதும் கேமராவை நோக்கி முத்த சத்ததுடன் வந்து க்யூட்டாக முத்தமிடுகிறது.