பொதுவாக நாம் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ஒருவர் நம் அருகில் வரும் போது நாம் நிச்சயம் கேட்கும் கேள்வி சாப்பிடுங்கள் என்பது தான். ஏனென்றால் அவரை பசியில் இருக்கவிட்டு நாம் எப்போதும் சாப்பிட கூடாது என்பது அதன் பொருள். அந்தப் பொருளை சிறுவயதிலேயே நன்றாக அறிந்து கொண்ட சிறுவன் ஒருவன் செய்யும் செயல் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. 


ட்விட்டர் தளத்தில் ஒரு கணக்கு ஒன்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், "பகிர்வது தான் உண்மையானஅக்கறை காட்டுவது" என்ற வாசகத்தையும் சேர்த்துள்ளது. அந்த வீடியோ பதிவில் சிறுவன் முதலில் எதோ ஒரு உணவை பொருளை சாப்பிட்டு கொண்டிருக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்பின்னர் அவனுக்கு அருகே பூனை ஒன்று வந்து நிற்கிறது. அந்தப் பூனையை பார்த்தவுடன் சிறுவன் தான் சாப்பிடும் உணவை அந்தப் பூனைக்கு தருகிறேன். அந்தக் காட்சி மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். 


 






அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இது ஒரு சிறப்பான செயல். அந்த சிறுவனின் செயல் நமக்கு பல விஷயங்களை சொல்லி தருகிறது என்பது போல் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் அந்த சிறுவனின் செயலை பாராட்டி வருகின்றனர். 


 






 






 






 






 


இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க: அட்டகாசமாக சுவற்றில் ஏறி அசர வைத்த 'ஸ்பைடர் கேர்ள்'- வைரல் வீடியோ !