இளம்கன்று பயமறியாது என்ற பழமொழி உள்ளது. அது உண்மை என்பதற்கு சான்றாக சில நேரங்களில் ஒரு சில சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றதுள்ளது. ஒரு பெண் குழந்தை ஒன்று பாம்பை இழுத்து விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 


 


இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “ஆஸ்திரேலியாவில் சாதாரண நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்” எனக் கூறி ஒரு வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பெண் குழந்தை ஒன்று நீளமான பாம்பு ஒன்றை கட்டி இழுக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. 


 






இந்த வீடியோவை பதிவிட்டு இந்த வீடியோவிற்கு ஒரு நல்ல கேப்ஷனை தாருங்கள் என்று அந்தப் பக்கம் கேட்டுள்ளது. இதற்கு கமெண்ட்ஸில் பலரும் தங்களுடைய கேப்ஷன்களை கொடுத்து வருகின்றனர். அதில் சிலர் ,”அப்பா நான் இதை வீட்டில் வைத்து கொள்கிறேன்” என்று கேட்பது போல் உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர். 


 


மேலும் சிலர் உலகிலேயே மிகவும் குறைந்த வயதில் பாம்பு பிடிக்கும் நபர் இந்த பெண் குழந்தை தான் என்றும் சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை தற்போது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண