இந்திய அரசு, கடந்த 2020 ஆண்டு ஜூன் மாதம் டிக்டாக்கை தடை செய்தது. பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் TikTok உள்ளிட்ட பல சீன செயலிகளை தடை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க தடை செய்ய திட்டம்:
இந்நிலையில், தற்போது அமெரிக்க பயனர்களை உளவு பார்க்க சீன அரசாங்கம், டிக் டாக் செயலியை பயன்படுத்துகிறது என்றும் அதன் மூலம் தவறான தகவல் மற்றும் சதி கோட்பாடுகளை பரப்புவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்காவில் டிக் டாக்கை தடை செய்வதற்கான மசோதா செனட் அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி ஜோ பிடன் மசோதாவில் கையெழுத்திட தயாராகி வருவதாகவும், இதையடுத்து டிக்டாக் மீதான தடை நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது
தனியுரிமை மற்றும் இணையப் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா மற்றும் அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளிலும் TikTok தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில நாடுகள் தளத்தை ஓரளவு மட்டுமே தடை செய்துள்ளன. சில நாடுகள் நாடு முழுவதும் TikTok ஐ தடை செய்துள்ளன மற்றும் நாட்டின் முக்கிய ஆஃப் ஸ்டோர்களில் இருந்து அதை நீக்கியுள்ளன.
TikTok ஐ தடை செய்த நாடுகள் பட்டியல்:
இந்திய அரசாங்கம், 2020 ஆம் ஆண்டு டிக் டாக் செயலியை தடை செய்தது.
ஆஸ்திரேலியா: ஏப்ரல் 2023 இல், பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஆஸ்திரேலியா தடை செய்தது.
ஐரோப்பிய ஒன்றியம்: தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
பிரான்ஸ்: தரவு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரான்ஸ் டிக்டாக்கை தடை செய்துள்ளது.
தைவான்: டிசம்பர் 2022 இல் டிக்டாக்கை தடை செய்தது, இந்த செயலி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதனால் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், அரசு சாதனங்கள் மற்றும் கணினியில் தடை செய்யப்பட்டன, மேலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.
கனடா: தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, அரசாங்கம் வழங்கும் சாதனங்களில் TikTok ஐப் பயன்படுத்த முடியாது என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து, நேபாளம்,பாகிஸ்தான்,பெல்ஜியம்,மால்டா லாட்வியா டென்மார்க் நெதர்லாந்து நார்வே ஆஸ்திரியா அயர்லாந்து மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.