அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் ரோ vs வேட் என்ற வழக்கில் பெண்களுக்கு இருந்த கருகலைப்பு உரிமையை பறிக்கும் வகையில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இந்த கருக்கலைப்பு தொடர்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பெண்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு கருக்கலைப்பு தொடர்பான உரிமை தரும் வரை ஆண்களுடன் பாலுறவு வைத்து கொள்ள போவதில்லை என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பெண்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்து வருகின்றனர்.
மேலும் பலர் ட்விட்டர் பக்கத்தில் ‘Sex Strike’ என்ற புதிய வகை போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சில பெண்கள் விதிகளில் இது தொடர்பான பதாகைகளையும் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் இந்தப் போராட்டம் அமைதியாக நடைபெற்று வருகிறது. ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இந்தப் போராட்டத்தில் சிறிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்தப் போராட்டத்திற்கு சமூக வலைதளங்களிலும் களத்திலும் ஆதரவு வலுத்து வருகிறது. பெண்களுக்கு மீண்டும் அந்த உரிமையை அளிக்கும் வரை இந்தப் போராட்டம் முடியாது என்று சில பெண்கள் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பிற்கு பிறகு அமெரிக்காவில் 26 மாநிலங்கள் கருகலைப்பு உரிமையை ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்