இந்தியாவில் 5 பைடன்கள் இருப்பதாகச் சொன்னார்கள். தேடித் தருகிறீர்களா என்று கேட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் இதோ அதற்காகத்தானே நிறைய கோப்புகளைக் கொண்டுவந்துள்ளேன் என்று பிரதமர் மோடி கூறியதும் வெள்ளை மாளிகையை மட்டுமல்ல உலக மக்களையே சற்றே லைட் மைண்டுக்கு கூட்டிச் சென்று வந்துள்ளது.


இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பென்றால் எல்லோரும் விரைப்பாக பிளாஸ்டிக் சிர்ப்புடன் பிளாஸ்டிக் முகத்துடன் இருக்க வேண்டியது அவசியமில்லை என நிரூபித்திருக்கிறது இந்த சந்திப்பும், பேச்சும்.
முன்னதாக பிரதமர் மோடி மூன்று நாட்கள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றார். வாஷிங்டன் சென்ற அவருக்கு மக்கள் ஊற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமெரிக்க தொழிலதிபர்களுடன் சந்திப்பு,  துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு, குவாட் தலைவர்களுடன் சந்திப்பு என அடுத்தடுத்த பரபரப்பான சந்திப்புகளை நிகழ்த்தினார் பிரதமர் மோடி. பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடைபெற்றது.






அப்போது ஆப்கானிஸ்தான் விவகாரம், காலநிலை மாற்றம், இந்தோ பசிபிக் பிராந்திய பாதுகாப்பு எனப் பல விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


இந்த சந்திப்பின் போது அதிபர் ஜோ பைடன், தனது இந்தியப் பயணத்தை நினைவு கூர்ந்தார். நான் 28 வயதாக இருக்கும் போது முதன் முதலில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். அதற்கு முன்னதாக எனக்கு மும்பையிலிருந்து பைடன் என்ற பெயர் கொண்டவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. என்னால் அக்கடிதத்தைப் பின்பற்ற முடியவில்லை. அடுத்த நாள் இந்தியாவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் என்னிடம் சில பத்திரிகையாளர்கள் இந்தியாவில் 5 பைடன்கள் இருப்பதாகக் கூறினர். அப்புறம் நான் அது பற்றி தேடியதில் கிழக்கிந்திய தேநீர் கம்பெனியில் கேப்டன் ஜார்ஜ் பைடன் இருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அயர்லாந்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் என்னால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று இப்போது நடக்கும் இந்த சந்திப்பின் முக்கியத்துவமே அந்த ஐந்து பைடன்களைக் கண்டுபிடிப்பதுதான் என்று பைடன் கூற, அதற்கு மோடி, அதற்கென்ன கண்டுபிடித்துவிடலாமே. அதற்காகத் தான் நான் இவ்வளவு கோப்புகளைக் கொண்டுவந்துள்ளேன் என்று கூற ஒட்டுமொத்த வெள்ளைமாளிகையும் சிரித்தது. இந்த சிரிப்பொலி இப்போது உலக ஊடகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.


லைட்டான டாக்கை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அடுத்ததாக ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.