அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தலுக்குத் திரும்பியுள்ளார் என அவரது வெள்ளை மாளிகை மருத்துவர் சனிக்கிழமை கூறினார். முன்னதாக, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


 






இதுகுறித்து அதிபரின் மருத்துவர் கெவின் ஓகானர் கூறுகையில், "79 வயதான பைடனுக்கு சனிக்கிழமை பிற்பகுதியில் ஆன்டிஜென் சோதனை செய்ததில் கொரோனா இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்களாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்றே வந்தது. இதை தொடர்ந்து, கடுமையான தனிமைப்படுத்தும் நடைமுறைகளுக்கு அவர் உட்படுத்தப்படுவார்.


 






கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு கொரோனா தொற்றால் அவர் மீண்டும் பாதிக்கப்பட்டிருப்பதையே இது குறிக்கிறது. பாக்ஸ்லோவிட் என்ற மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த பிறகு அதிலிருந்து விடுபட்டு மீண்டும் அவர்கள் கொரோனாவால் பாதிப்புக்குள்ளானால் அதை 'rebound positivity' என்போம். இதனால்தான், பைடன் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.


அதிபருக்கு எந்த அறிகுறிகளும் மீண்டும் தோன்றவில்லை. தொடர்ந்து நன்றாக உணர்கிறார். இந்த நிலையில், இந்த நேரத்தில் சிகிச்சையை மீண்டும் தொடங்க எந்த காரணமும் இல்லை" என்றார்.


 






கொரோனாவிலிருந்து பைடன் மீண்டு இருப்பதாக ஓகானர் தெரிவித்த மூன்று நாள்களில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. பெருந்தொற்றிலிருந்து மீண்ட பிறகு, அவர் தனிமைப்படுத்தி கொள்ள தேவையில்லை என மருத்துவர் தெரிவித்திருந்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண