ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஜி-20  மாநாடு வரும் 9, 10, -ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஜி-20 அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரஷ்ய அதிபர் புதின்,சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வர உள்ளதாக வெள்ளி மாளிகை உறுதி செய்துள்ளது. 


இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டின் வளர்ச்சி குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஜி-20 உச்சி மாநாடு


அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பான ஜி-20 நாடுகள் பங்கேற்கும் உச்சிமாநாடு வரும் 9 மற்றும் 10ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா தலைமையில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 7ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வர உள்ளார்.


பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை


இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 7ம் தேதி இந்தியா செல்வார் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 8-ம் தேதி அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த சந்திப்பின் போது இந்தியா–அமெரிக்கா இடையேயான உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜோ பைடன் மற்றும் மோடி ஆலோசனை நடத்த உள்ளனர் என வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய வருகையை உறுதி செய்துள்ள நிலையில், சீன பிரதமர் வரமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் தனக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லவ்ரோவ் கல்ந்துகொள்வார் என்று ரஷ்ய அதிபர் புடின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.


நவம்பர் 12-18 தேதிகளில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு தலைவர்கள் உச்சிமாநாட்டில் சீன அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் ஆகியோருக்கு இடையே  நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஜின்பிங் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.