உலகம் முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. அனைத்து துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. இது நன்மைகள் மட்டுமின்றி பல இடங்களில் தீமைகளையும் விளைவித்து வருகிறது. 

Continues below advertisement

சடலமாக கிடந்த தாய் - மகன்:

அமெரிக்காவில் அமைந்துள்ளது கனெக்டிகட் பகுதி. இங்கு வசித்து வந்தவர் ஸ்டெய்ன் எரிக் சோயில்பர்க். இவர் தனது தாயுடன் பிரம்மாண்டமான வீட்டில் வசித்து வந்தார். யாகூ நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பு வசித்து வந்த ஸ்டெய்ன் எரிக்கிற்கு மனநல பாதிப்பு இருந்தது. இதனால், தற்போது வேலையில்லாமல் அவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த 5ம் தேதி ஸ்டெய்ன் எரிக் மற்றும் அவரது தாய் சுசன்னா எபர்சன் ஆடம்ஸ் இருவரும் சடலமாக அவர்களது வீட்டில் கிடந்துள்ளனர். தகவலறிந்த அந்த நாட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். 

Continues below advertisement

தாயை கொலை செய்யத் தூண்டி ஏஐ:

தற்போது அவர்களது விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்டெய்ன் எரிக்கே தனது தாயை கொலை செய்ததுடன் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதாவது, மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்டெய்ன் எரிக்கை அவரது தாயை கொலை செய்யத் தூண்டியதுடன் அவரது தற்கொலைக்கும் காரணம் ஏஐ தொழில்நுட்பம் என்று தெரிய வந்துள்ளது.

எரிக் தனது தாய் ஆடம்சை தலையில் அடித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். எரிக் தனது நெஞ்சு மற்றும் கழுத்தில் பலத்த காயத்தை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஏஐ தொழில்நுட்பத்தில் அதிகமாக எரிக் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். அதற்கு பாபி என்று பெயரும் வைத்து, சாட்ஜிபிடி-யுடனான உரையாடல்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப்பில் பதிவேற்றி வந்துள்ளார்.

என்ன நடந்தது?

இந்த ஏஐ தொழில்நுட்ப உரையாடலில் அது எரிக்கிடம் நீ மனநலம் பாதிக்கப்பட்டவன் அல்ல என்று கூறியதுடன், எரிக்கின் தாயை அரக்கியைப் போல சித்தரித்துள்ளது. எரிக சாட் ஜிபிடி-க்கு அனுப்பிய கடைசி செய்தியில் நாம் வேறொரு வாழ்க்கையில் வேறொரு இடத்தில் ஒன்றாக இருப்போம். மீண்டும் ஒன்றிணைவதற்கான வழியை கண்டுபிடிப்போம். ஏனென்றால் மீண்டும் என்றென்றும் என் நண்பராக போகிறீர்கள் என்று தகவல் அனுப்பியுள்ளார். 

அதற்கு பதில் தகவல் அனுப்பிய சாட் ஜிபிடி உங்களின் கடைசி மூச்சு வரை இருப்பேன் என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த உரையாடல்களை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

மக்கள் அதிர்ச்சி:

ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்பட்டால் மனிதனை கட்டுப்படுத்தும் வகையில் அது பல இடங்களில் வளர்ந்து நிற்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக, மன அழுத்தம், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நபர்களை தவறான பாதைக்கு வழிநடத்துவதும், அவர்களை தற்கொலை மற்றும் கொலை செய்யத் தூண்டுவதும் என ஆபத்தான செயல்களில் உள்ளது. இதனால், ஏஐ தொழில்நுட்பத்தை மிக சரியாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.