US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி, 100-க்கும் அதிகமான பிரநிதிகளின் ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தல்:


அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் 15 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ள இந்த தேர்தலில்,  முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பாலான மாகாணங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, பெரும்பாலான மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி வாகை சூடியுள்ளார்.


டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற மாகாணங்கள்:


கடந்த தேர்தல் தோல்வியின் போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டது, கமலா ஹாரிஸ் மீதான மோசமான விமர்சனங்கள் என ட்ரம்பிற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. கருத்து கணிப்புகளும் அவருக்கு எதிராகவே இருந்தன. ஆனால், தற்போது வெளியாகும் தேர்தல் முடிவுகள் அத்தனை கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கியுள்ளன. பல மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றிகளை குவித்துள்ளார்.  தற்போது வரை இண்டியானா, கென்டகி, வெஸ்ட் வர்ஜினியா, டென்னிஸீ, அலபாமா, மிஸ்ஸிஸிபி, தெற்கு கரோலினா,  ஃபுளோரிடா,  ஓக்லஹோமா ஆகிய மாகாணங்களிலும் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், வடக்கு டகோடா, தெற்கு டகோடா, நெப்ரஸ்கா, யோமிங், அர்கன்சாஸ், லூசியானா மற்றும் டெக்சாஸ் ஆகிய மாகாணங்களிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். அதன்படி, 177 பிரதிநிதிகளின் ஆதரவு வாக்குகளை பெற்றுள்ளார். 50 மாகாணங்களில் இருந்து தேர்தெடுக்கப்பட உள்ள, 538 பிரதிநிதிகளில் 270 பேரின் ஆதரவை பெறுபவரே அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோக லோவா, ஓஹியோ, நியூ மெக்சிகோ, விர்ஜினியா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் ஜார்ஜியா ஆகிய மாகாணங்களிலும் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.


கமலா ஹாரிஸ் தொடர்ந்து பின்னடைவு:


மறுமுனையில் கமலா ஹாரிஸ் தற்போது வரை நியூயார்க், வெர்மோண்ட், மஸ்ஸாசூசெட்ஸ், கனெக்டிகட், நியூஜெர்சி, டெலாவெர், மேரிலேண்ட் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதன்படி, தற்போது வரை கமலா ஹாரிஸ் 99 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.


மேலும், நியூ ஹேம்ப்ஷைர், பென்சில்வேனியா, மிச்சிகன், மிசோரி, கன்சாஸ் மற்றும் கொலராடோ ஆகிய மாகாணங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறார். அவற்றின் பல


ஸ்விங் மாநிலங்கள்


எந்த கட்சியின் ஆதிக்கமும் இல்லாதவையாகவும், தேர்தலை முடிவை நிர்ணயிக்கும் காரணிகளாகவும் திகழும்,  7 மாநிலங்கள் தேர்தல் முடிவுகளில் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன. இதன் காரனமாக அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்கள் ஸ்விங் மாநிலங்களாக கருதப்படுகின்றன. இவற்றில் பென்சில்வேனியாவில் மட்டுமே தற்போது கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வருகிறார்.