அமெரிக்கா போன்ற நாடுகளில் தனிமனிதர் நடத்தும் துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. 


அந்தவகையில் அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பாஃபெல்லொ (Buffalo) நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்த நபர் துப்பாக்கியால் அனைவரையும் சராமரியா சுட்டுள்ளார். அதை லைவ் வீடியோவாக ஒளிப்பரப்பியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 





சூப்பர் மார்க்கெட்டின் உள் மிலிட்டெரி உடை அணிந்த 18-வயது நபர் ஒருவர் ஹெட்மெட் கேமராவில் லைவ்-ஸ்ட்ரீம் செய்தபடி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அனைவரையும் சுட்டார். இதில் 10 பேர் இறந்துள்ளனர். மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதை வீடியோவாக ‘Twitch’ என்ற தளத்தில் ஒளிப்பரப்பியுள்ளார். 


இதை போலீஸ் “racially motivated violent extremism” என்று குறிப்பிட்டுள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் 11 பேர் கருப்பினத்தவர்கள். துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியவரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பத்திற்கு வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.இதற்கு நீதிபதி காத்தி ஹோசல் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட மக்களின் மீதான வெறுப்பினால் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் ஈடுபட்டவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறியுள்ளார். 





சூப்பர் மார்க்கெட்டில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு, போலீசார் கருப்பு இனத்தவர்கள் மீதான வெற்றுப்பு காரணமாக நடத்தப்படும் குற்றங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இதற்கு முன்னர், ஒரு மாதத்திற்கு முன், புரோக்லீன் இரயில் நிலைய சுரங்க பாதையில நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு வன்முறையில் 10 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் காங்கிளின்(Conklin)  நகரத்தைச் சேர்ந்த பேடன் ஜென்ரான் (Payton Gendron) என்றும், அவர் பஃபல்லோ நகரில் இருந்து 320 கி.மீ தூரத்தில் வசிக்கிறார் என்று விசாரணையில் தெரிந்துள்ளது. இவர் அளவு தூரம் பயணித்து ஏன், இங்கு வந்து துப்பாkகிச் சூடு நடத்தினார் என்பது குறித்தும் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.