இந்தியாவில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக பரவலாகத் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்குத் தீர்வு காண்பதற்காக அரசு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை அதிக உற்பத்தி செய்ய முடுக்கிவிட்டுள்ளது.




இதையடுத்து கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்ட்டியூட் தயாரிப்புக்கான சிலிக்கான் குப்பி மூலப்பொருட்கள் தேவை எனவும் தடுப்பூசி மூலப்பொருட்கள் ஏற்றுமதி மீதான தடையை விலக்கிக் கொள்ளும்படியும் அமெரிக்க அரசிடம் கேட்டிருந்தது. தங்களுடைய மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திவருவதால் இதில் தற்போது கவனம் செலுத்த முடியாது என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.






இந்த நிலையில் நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, தடுப்பூசி மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்தியாவுக்குத் தேவையான கொரோனா பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்புக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவையும் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அனைத்து வகையிலும் உதவியாக அமெரிக்கா துணைநிற்கும் என்பதையும் அந்த நாடு தெரிவித்துள்ளது. நேற்று இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுடன் அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் பேசியதை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.


Also Read: மெட்ரோ ரயிலுக்காக காவு கொடுக்கப்படுகிறதா சென்னையின் காடுகள்?