ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது.
ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சமீபத்திய முன்னேற்றங்கள் நாளை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டவர்களை பாதுக்காப்பாக வெளியேற்றுவது தொடர்பான தீர்மானங்களை பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் நிரந்தரமல்லாத உறுப்பினர் ஜெர்மனி ஆகிய நாடுகள் முன்மொழிந்தன. இதில் பயங்கரவாத எதிர்ப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாளையுடன் ( 31-ம் தேதி) ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படும் என்று ஜோ பைடன் அரசு கூறியிருந்ததது. அதன் பிறகு, காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேற விரும்பும் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் தீர்மானத்துக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானுக்கு ஐ.நா வின் அமைதி காக்கும் படைகள் அனுப்பும் சாத்தியம் குறித்து பாதுகாப்பு கவுன்சில் எந்த விவாதத்திலும் ஈடுபடவில்லை என்று ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் முன்னதாக தெரிவித்தது. முன்னதாக, ஆப்கான் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக்கூட்டம் நியூயார்க்கில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்றது . இந்தியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஐ நா-வுக்கான இந்திய தூதரும், ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவருமான டி எஸ் திருமூர்த்தி பேசுகையில், ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்படுவது கவலையளிப்பதாக கூறினார். ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது என்று ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்தார்.
முன்னதாக, சுழற்சி அடிப்படையிலான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஏற்றுக் கொண்டது.
மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளுடன் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளன. இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள், சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு தலைமை பொறுப்பை வகிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் முதல்முறையாக இந்த கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுக் கொண்டது
மேலும், வாசிக்க:
Kabul Airport Blast: காபூல் குண்டுவெடிப்புக்கு காரணமான ISIS கொரசான் அமைப்பு.. யார் இவர்கள்?