ரஷ்யா- உக்ரைன் இடையே தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்று சீனா ரஷ்யா அரசை கேட்டுகொண்டிருந்தது. மேலும், இதற்கு மற்ற நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்தியிருந்தது. 


இந்நிலையில், சீனாவின் இந்த ஆலோசனைக்கு ரஷ்யா பதிலளித்துள்ளது. 


ரஷ்யாவின் க்ரெம்லின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ். “ எங்கள் நட்பு நாடான சீனா வழங்கியுள்ள போர் தீர்வு பரிந்துறைகளை கவனித்திருக்கிறோம். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அமைதிக்கு வழிவகுக்கும் எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை.” என்று தெரிவித்துள்ளது. 


உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சீனா 12 - அம்ச செயல் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: ''உலக நாடுகள் அனைத்திலும்  இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். கூட்டு ராணுவத்தை வலுப்படுத்துவதன் மூலமோ விரிவுபடுத்துவதன் மூலமோ ஒரு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.


போர் ஒருவருக்கும் நன்மையை அளிக்காது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ரஷ்யாவும் உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரே நோக்கத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். அமைதியை நிலைநாட்ட அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும். இதன் மூலம் பதற்றம் குறைந்து போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வழிகளை கண்டடைய வேண்டும். 


அமைதி பேச்சுவார்த்தையும் போருக்கான ஒரே தீர்வாக இருக்க முடியும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு சீனாவின் உறுதியான ஆதரவு தொடரும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


உக்ரைன்- ரஷ்யா போர்


அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியத்தில் உள்ள 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நேட்டோ கூட்டமைப்பில் தன்னை இணைத்து கொள்ள உக்ரைன் அரசு முயன்றது. இது ரஷ்யாவுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதாலேயே தாக்குதலை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா தொடங்கியது. முதலில் ரஷ்ய படைகள் கடுமையாக தாக்கினர். அதற்கு ஈடாக உக்ரைனும் போராடியது. உலக நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். மேலும் பல ஆயுதங்களையும் வழங்கின. இப்படியே போர் தொடங்கி ஓராண்டாகத் தொடர்கிறது.


இந்த உக்ரைன் ரஷ்யா போரில் சுமார் 43 ஆயிரம் பொதுமக்களும், 2 லட்சம் ராணுவ வீரர்களும் உயிரிழந்தாக கூறப்படுகிறது. மேலும் இந்த போரினால் 57 ஆயிரம் படுகாயமடைந்துள்ளதகா கூறப்படுகிறது.மேலும், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை டேனேட்ஸ்க், கேர்சன் லுஹான்ஸ்க் உள்ளிட்ட 20 சதவீத பரப்பளவை ரஷ்யாவிடம் உக்ரைன் இழந்தது. 


இந்த போரால் இரு நாடடுகளுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல உலக நாடுகள் முயற்சித்தனர். ஆனால் முடிவுக்கு வராமல் ஓராண்டாக நடந்து வருகிறது.   உக்ரைன் ரஷ்யா போர் ஓராண்டை நிறைவு பெற்றுள்ள நிலையில், அதனை பிரதிபலிக்கும் வகையில் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் உக்ரைன் கொடியில் பிரதிபலித்தது. உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது.









 


விரைவில் சந்திப்பு


இந்த போர் ஓராண்டை கடந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். ரஷ்யாவுடன் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.   ரஷ்யாவுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.