உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ”ரஷ்ய ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான செய்தி வதந்தி; அவ்வாறு நான் கூறவில்லை. உக்ரைன் நாட்டை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. குழந்தைகளுக்காக  போராடுகிறோம்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். 


அதனை அடுத்து, உக்ரைன் நாட்டிற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாற்றினேன். 1,00,000க்கும் அதிகமானோர் உக்ரைன் நாட்டை படையெடுத்து வந்துள்ளனர். இந்தியா உக்ரைனுக்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொண்டேன்” என தெரிவித்திருக்கிறார்.






இந்நிலையில், உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பான தனது கவலையை உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி பதிவு செய்திருக்கிறார். இந்தியர்களை பத்திரமாக மீட்டு நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அமைதியான முறையில் இந்த விவகாரத்தை சரி செய்ய இந்தியாவின் பங்களிப்பு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.






உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் ரூமேனியா மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விமானங்களை அனுப்பியுள்ளது. இந்தியர்கள் அனைவரும் அதிகாரிகளிடம் அறிவிக்காமல் எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் 24 மணி நேரம் இயங்கக்கூடிய உதவி எண்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குடியிருப்புகளின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் ஆதங்கம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண