குழந்தைக்குப் பெயர் வைப்பது என்பது பெற்றோர்களுக்கு  இருக்கும் மிகப்பெரிய டாஸ்க் . குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே குழந்தைக்கான பேரை நிர்ணயிக்க ஆரம்பித்து விடுகின்றனர் சிலர். சிலர் ஜாதகங்களை பார்த்து அதில் பரிந்துரைக்கப்படும் எழுத்திற்கு ஏற்ற ,மாதிரியாக பெயர் வைப்பார்கள். இன்னும் சிலர் ஒரு பிரபலமான நபர், நினைவுச்சின்னம், இடம் அல்லது கற்பனைக் கதாபாத்திரத்தின் பெயரால் ஒரு குழந்தைக்கு பெயரிடப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு குழந்தைக்கு அவர்களின் பெற்றோரின் விருப்பமான சிற்றுண்டியின் பெயரை வைத்துள்ளனர்.







லண்டனை சேர்ந்த தம்பதிகள் புதிதாக பிறந்த தங்கள் குழந்தைக்கு பக்கோடா என பெயர் சூட்டியுள்ளனர். இது அவர்களுக்கு பிடித்தமான சிக்கன் பக்கோடாவை ஆடர் செய்து சாப்பிட்டு எடுக்கப்பட்ட முடிவு என அந்த குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். தி கேப்டியன்ஸ் டேபிள் என்னும்  உணவகத்தில் இந்த உணவு ஆடர் செய்யப்பட்டதால் , அந்த அறிவிப்பை அந்த உணவகமே இணையத்தில்  ஷேர் செய்துள்ளது.  இந்தியாவில் இதே பெயருடன் இந்த குழந்தை மழைக்காலங்களில் வெளியே வர முடியாது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.