ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் நோயம் ஹப்பர்ட். அவருக்கு வயது 44. மருந்து நிறுவனத்தில் பணியாற்றும் அவர் கடந்த பகுப்பாய்வு வேதியியல் நிபுணராக பணிபுரிந்து வருகிறார்.  அவர் கடந்த 2012ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்கு பணி நிமித்தமாக சென்றார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலைில், அவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார்.




இதையடுத்து, அவரது மனைவி இஸ்ரேல் நாட்டு நீதிமன்றத்தில் அந்த நாட்டு விவகாரத்து சட்டத்தின்படி வழக்குத் தொடர்ந்தார். இந்த நிலையில், இதையடுத்து அந்த நாட்டு உள்ளூர் நீதிமன்றம் மனைவியை விவகாரத்து செய்த நோயம் ஹப்பர்ட் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது. அதாவது, வரும் 9 ஆயிரத்து 999ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது.  அல்லது தனது மகன்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மில்லியன் டாலர் ரொக்கத்தை ஜீவனாம்சமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


இஸ்ரேல் நாட்டின் உள்ளூர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் அந்த நாட்டிலே சிக்கித் தவித்து வருகிறார். அவர் தன்னை மீட்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆஸ்திரேலிய குடிமகன் சிக்கித் தவித்து வரும் நிகழ்வு தற்போது பூதாகரமாகி வருகிறது. இதுபோன்ற கடுமையான சட்டங்களாலும், நீதிமன்ற தீர்ப்புகளாலும் இஸ்ரேலில் சுமார் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




இஸ்ரேல் நாட்டின் விவகாரத்து சட்டங்கள் மூலம் அளிக்கப்படும் தண்டனைகள் மிகவும் கடுமையானதும், அதிகப்படியானதும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற சட்டங்களால் இஸ்ரேலில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்க வேண்டும் என்றும் பல அமைப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். மிகவும் வளர்ந்த நாடான இஸ்ரேலில் சட்ட, திட்டங்கள் மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண