இந்தியப்பயணிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட சுற்றுலா சிறப்பு விசாவை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் வான்வழிப்போக்குவரத்திற்குத் தடை விதித்திருந்தனர். தற்போது தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மீண்டும் படிப்படியாக விமான போக்குவரத்துச் சேவை துவங்கியுள்ளது. மேலும் சுற்றுலாவிற்கு செல்வதற்கும் சில நாடுகள் அனுமதியை வழங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 5 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் இந்தியாவிடையேயான விமானப்போக்குவரத்து சேவை தொடங்கியது. இருந்தப்போதும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. அதிலும் இந்நியப்பயணிகள் அரபு நாடுகளுக்கு பயணிக்க வேண்டும் என்றால் அவர்கள், பயணம் செய்வதற்கு முந்தைய 14 நாட்கள் இந்தியாவிற்கு சென்றிருக்ககூடாது போன்ற விதிமுறைகளோடு சிறப்பு விசாவை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இவை இந்தியர்களுக்கு மட்டுமின்றி நேபாளம், நைஜீரியா,பாகிஸ்தான், இலங்கை, உகாண்ட போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சிறப்பு சுற்றுலா விசாவினை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டிருந்தது.
ஐக்கிய அரசு அமீரகம் டிவிட்டரில் இதுக்குறித்து தகவலை வெளியிட்டதையடுத்து, இந்தியாவைச்சேர்ந்த ஒருவர் இந்த அறிவிப்பு குறித்து ஒரு சந்தேகத்தினை கேட்டிருந்தார். அதில், நாங்கள் இந்திய குடிமக்கள், ஆனால் அமெரிக்க விசா வைத்திருக்கிறோம். எனவே அபுதாவிற்கு பயணம் செய்யும் நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் துபாய்க்கு பயணிக்க முடியுமா? என்று கேட்டிருந்தனர். இந்த சூழலில் தான், எந்த காரணமும் இன்றி இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு விசா வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஐக்கிய அரபு நாட்டின் எடிஹாட் விமான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் எவ்வித காரணமும் இன்றி இந்தியப்பயணிகளுக்கான விசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான காரணம் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் ஒருவர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று வருவதாக இருந்தால் அவர், விமானத்தில் பயணிப்பதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக அவர் கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. மேலும் அந்நாட்டுக்கு சென்றாலும் கொரோனா பரிசோதனை முடியும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.