ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நஹ்யான் வெள்ளிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் விவகாரத் துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.




74 வயதில் மறைந்த ஷேக் கலீஃபா பின் சையத் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து யுஏஇ அதிபராக இருக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்களுக்கு ஜனாதிபதி விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது. ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நவம்பர் 3, 2004 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



1971 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்ட பின்னர், சேக் கலீபா, அதிபரான தனது தந்தையின் கீழ் துணைப் பிரதம அமைச்சராகப் பதவியேற்றார். 1976 மே மாதத்தில் இவர் ஐக்கிய அரபு அமீரகப் படைகளின் துணைத் தளபதியாகவும் ஆனார். அத்துடன் பெட்ரோலியம் அவையின் தலைவராகவும் செயலாற்றி வந்தார். 2004 ஆண்டிற்கு முன்னதாக தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அதிபர் பதவி வேலைகளை இவர்தான் கவனித்து வந்துள்ளார். இவரது தந்தையாரும் முன்னாள் அதிபருமான சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் காலமான பின்னர் 2004 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி, இவர் பதவியேற்றார். அதன்படி 18 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இன் இரண்டாவது அதிபர். இவர் உலகின் இரண்டாவது பணக்கார அரசரும் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு, 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்படுகிறது.






2014 இல் இவருக்கு ஏற்பட்ட மரடைப்புக்கு பிறகு ஒரு சர்ஜரி செய்யப்பட்டது. அதன்பிறகு மிகவும் குறைவாகத்தான் வெளியில் தலைகாட்டி வந்தார். அலுவலக பணிகளை அவரது சகோதரர் ஆன, முகமது பின் சயதுதான் கவனித்து வந்தார். 


ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அத்தும் மூன்று நாள்களுக்கு  மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.