சமீப காலமாக துபாய் அரசு வெளிநாட்டவர்களை குடியமத்துவதற்கும் , சுற்றுலா பயணிகளை கவர்வதற்குமான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திரை பிரபலங்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குவதன் மூலம் தங்கள் நாட்டின் சுற்றுலா மேம்படும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. அதே போல வெளிநாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களை குறி வைத்து, அவர்கள் தங்கள் நாட்டில் குடியேறும் வகையில் பனை தீவு ஒன்றையும் அந்த அரசு உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் இன்று முதல் குடியேற்ற சட்டங்களை மாற்றி அமைத்து, புதிய சட்ட விதியை அமலாக்கியுள்ளது. அது இந்த வகையில் இந்தியர்களுக்கு பயனளிக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதிய விசா விதிகளின் அடிப்படையில் 10 ஆண்டு விரிவாக்கப்பட்ட கோல்டன் விசா திட்டம், திறமையான தொழிலாளர்களுக்கு சாதகமான ஐந்தாண்டு க்ரீன் குடியுரிமை மற்றும் புதிய multiple-entry சுற்றுலா விசா ஆகியவை 90 நாட்கள் வரை துபாய் நாட்டில் தங்க அனுமதிக்கும்.குடிவரவுச் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை செய்ய அல்லது வாழ விரும்புபவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய குடியேற்றச் சட்டங்களின் கீழ் மாற்றப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன ?
திய குடியேற்றச் சட்டங்களின் கீழ் , ஐந்தாண்டு கிரீன் விசா மூலம் வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டவர் அல்லது அவர்களிடம் பணிபுரியும் பணியாளர்களின் உதவி பெறாமல் தங்களை ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கும். இந்த விசாவிற்கு, ஃப்ரீலான்ஸர்கள், திறமையான பணியாளர் மற்றும் முதலீட்டாளர்கள் தகுதியுடையவர்கள். மேலும் க்ரீன் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஸ்பான்சர் செய்துக்கொள்ளலாம்
கிரீன் விசா வைத்திருப்பவரின் அனுமதி காலாவதியானால், அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும்.
கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் குடியுரிமை வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், குறிப்பிட்ட துறையில் திறமைகள் கொண்ட நபர்கள் தகுதி பெறுவார்கள்.
கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்யலாம்.
கோல்டன் விசா வைத்திருப்பவரின் குடும்ப உறுப்பினர்களும், அந்த விசா செல்லுபடியாகும் வரையிலோ அல்லது அதனை வைத்திருப்பவரின் மறைவுக்குப் பிறகும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கலாம்.
கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் வணிகங்களின் 100 சதவீத உரிமையின் பலனையும் அனுபவிப்பார்கள்.
சுற்றுலா விசாக்கள் இப்போது 60 நாட்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்குவதற்கு பார்வையாளர்களை அனுமதிக்கும்.
ஐந்தாண்டு பல நுழைவு சுற்றுலா விசா (multi-entry tourist visa ) , பார்வையாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடர்ச்சியாக 90 நாட்கள் வரை தங்க அனுமதிக்கும்.
வேலை தேடுதல் விசா, ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் இல்லாமலேயே தொழில் வல்லுநர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேட அனுமதிக்கும்.