எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், எலான் மஸ்கின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகியிருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக டிவிட்டர் அலுவலகத்திற்கு, இன்னும் முழுமையாக  வாடகை  கொடுக்கவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.


சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நிர்வாகம் இன்னும் வாடகை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


ஹார்ட்ஃபோர்டு பில்டிங்கில் (Hartford Building) உள்ள 30 தளத்தில் டிவிட்டர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 16, ஆம் தேதி வாடகையை செலுத்துமாறு டிவிட்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 


இது தொடர்பாக கொலம்பியா ரெய்ட் (Columbia Reit) என்ற நிறுவனம் புகார் தெரிவித்திருப்பதில், டிவிட்டரின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கும் இன்னும் வாடகை செலுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. சான் பிரான்ஸ்சிஸ்கோ மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


மேலும், டிவிட்டர் வாடகை செலுத்தாமல் இருப்பது இது முதல்முறை அல்ல என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 


ப்ளூம்பர்கின் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, வாடகைத் தொகையான 1,36,250 அமெரிக்க டாலரை 5 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும்  வாடகையை ட்விட்டர் நிறுவனம் வழங்காததால் வழக்கு தொடர்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாடகை செலுத்தாது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், டிவிட்டர் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக.” தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்த ஆதாரமோ, புள்ளி விவரங்களோ டிவிட்டர் சார்பில் வெளியிடப்படவில்லை.