ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்சிச் சூடு
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை ஒழிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினரும், ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள அப்பர் டாங்கிரி என்ற கிராமத்திற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். பின்பு, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.
4 பேர் உயிரிழப்பு
ராஜோரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15க்கும் மேற்பட்டோர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து அலறி துடித்தனர். இதனால் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ஜம்மு-காஷ்மீர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் படுகாயமடைந்தவர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். பின்பு, மற்றொருவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கி சிகிச்கை தொடங்கிய நேரத்தில் அந்த நபரும் உயிரிழந்துவிட்டாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்தது. மேலும், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 6 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் தீபக் குமார், சதீஷ் குமார், சிவ் பால், பிரீத்தம் பால் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பயங்கரவாதிகள் அப்பாவி மக்கள் சுட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது. அப்பர் டாங்கிரி என்ற கிராமத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
கண்டனம்
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரவீந்தர் சர்மா ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, " பயங்கரவாதத்தை ஒழிப்பதாக பாஜக உறுதியளித்த நிலையில், இதுபோன்ற சம்பவம் நடந்தது கண்டனத்திற்குரியது. ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மை மக்களை பாதுகாக்க தவறிவிட்டனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்தார்.
மேலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரண தொகையாக வழங்கவும், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுபோன்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போராட்டம்
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. ரஜோரியில் உள்ள மருத்துவமனை முன்பு திரண்டிருந்த மக்கள் ஏராளமானோர் பாகிஸ்தானிற்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பினர். பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்திற்கு பாஜகவும் தங்கள் அதரவை தெரிவித்துள்ளது.