உலகின் முன்னனி பணக்காரராரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுலவருமான எலான் மாஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரை வாங்குவதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக எலான் மஸ்க்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார்.


இந்த தகவலை எலான் மஸ்க் தெரிவித்ததும், உலகம் முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது.  இதைத் தொடர்ந்து ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.  


தற்போது ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதன் ஷேர்கள் எலான் மஸ்க்கிற்கு மாற்றப்பட்டு வருகிற பணிகள் நடந்து வருகிறது. இச்சூழலில், ட்விட்டர் நிர்வாகத்தின் மீது கோபம் கொண்ட எலான் மஸ்க், ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தினை ரத்து செய்வதாக அறிவித்தார்.  


ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் மற்றும் தொடர்ந்து செயல்படாமல் இருக்கக்கூடிய கணக்குகள் பற்றிய விபரங்களை, ஒப்படைக்கும் படி மஸ்க் ட்விட்டர் நிர்வாகத்திடம் கேட்டிருந்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகம் இது குறித்து எந்த விதமான தகவலையும் வழங்கவில்லை. மேலும் ட்விட்டர் தெரிவித்திருந்ததை விட 4 மடங்கு அதிகமான போலி கணக்குகள் உள்ளதாகவும், இதனால் லாபமற்ற ட்விட்டரை வாங்கி பயனற்றது என எலான் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், ட்விட்டரின் நடவடிக்கையினால் மிகவும் எரிச்சல் அடைந்த எலான் மஸ்க், தற்போது அதை வாங்குவதற்கான 44 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தினை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். 


ஒப்பந்தம் ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ள இந்த தகவலால் ட்விட்டர் நிர்வாகம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஒப்பந்தத்தினை மீறியதாக எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிர்வாகம் வழக்கு போடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், ட்விட்டரை வாங்குவதிலிருந்து பின்வாங்கியுள்ள மஸ்கின் முடிவு செல்லாது என்றும் தவறானது என்றும் ட்விட்டர் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகத்தின் வழக்கறிஞர்கள் மஸ்கின் வழக்கறிஞர்களுக்கு எழுதிய கடிதத்தில், "ட்விட்டர் ஒப்பந்த விதிகளில் எதுவும் மீறப்படவில்லை.


மஸ்க் மற்றும் அவரது கட்சிதாரர்கள் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள விதிகளுக்கு உட்பட்டு இணங்கி நடக்க வேண்டும் என ட்விட்டர் வலியுறுத்துகிறது. ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பரிவர்த்தனைகளை நிறைவேற்றுவதற்கும், திறம்படச் செய்வதற்குமான நியாயமான சிறப்பான முயற்சிகளைப் மேற்கொள்ள வேண்டும் என்பதும் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண