ட்விட்டரின் முன்னாள் சிஇஒ மற்றும் இணை நிறுவனர் ஜேக் டார்ஸி ட்விட்டர் ஃபைல்ஸ் என்று வெளியிடப்படும் தகவல்களில் தன்னுடை சகாக்களை குறைகூறுவது வன்மத்தின் உச்சம் என்று சாடியுள்ளார்.


டார்ஸி ட்விட்டர் நிறுவனத்தின் மீது சரிவர கவனம் செலுத்தவில்லை மாறாக அவர் தான் நடத்தும் ஸ்கொயர் இன்க் நிறுவனத்தின் மீதே அதிக கவனம் செலுத்துவதாகவும் புகார் எழுந்தது. 2020 ஆம் ஆண்டு எலியட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஜேக் டார்ஸியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் 2021 நவம்பரில் ட்விட்டர் சிஇஓவாக இருந்த ஜாக் டார்ஸி தனது பதவியை ராஜினாமா செய்தார்.


இந்நிலையில் தான் சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் உலகப் பணக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கினார். இந்நிலையில் ட்விட்டர் ஃபைல்ஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்த பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் பணி நீக்கம் என பலவற்றை மேற்கொண்டு வருகிறார். இதனால் ட்விட்டரின் எதிர்காலம் குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் ‘ ட்விட்டர் ஃபைல்ஸ்’ என்று ஒன்று கூறப்படுகிறது. 


ட்விட்டர் ஃபைல்ஸ் 2.0 ட்விட்டரின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க்கால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2020-ம் ஆண்டில் ஜோ பைடனின் ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது, அவரது மகன் மற்றும் அவரின் சந்தேகத்திற்குரிய வணிக பரிவர்த்தனைகள் பற்றி தீவிரமாக ட்விட்டர் தணிக்கை செய்ததாக கூறப்படுகிறது.


ட்விட்டர் ஃபைல்ஸ் 2.0, முன்னாள் பத்திரிகையாளர் பாரி வெயிஸ்ஸால் வெளியிடப்பட்டது. 


எலான் மஸ்க்கிற்கு நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு முன் தளத்தின் ஊழியர்கள், பயனர்கள் அல்லது பதிவுகளின் மீது விரிவான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். அவர்கள் பழமைவாத அல்லது வலதுசாரிகளின் விகிதாசாரத்தை குறிவைத்து பயன்படுத்துகின்றனர். இந்த கட்டுப்பாடு மற்றும் பணியாளர்கள் “விசிபிலிட்டி ஃபில்டரிங்’ (விஎஃப்) மூலம் செயல்படுத்தப்படுகிறது.


VF என்பது ஒரு குறிப்பிட்ட பயனர்/பதிவைப் பற்றிய தேடல்களைத் தடுப்பது, ட்வீட்டின் கண்டுபிடிப்புத் திறனைக் கட்டுப்படுத்துவது மற்றும் சில பயனர்கள் ஹேஷ்டேக் தேடல்களில் பிரபலமடைவதிலிருந்து அல்லது தோன்றுவதைத் தடுப்பதை உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது.


இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜாக் டார்ஸி தனது வலைப்பக்கத்தில், எனது சக நண்பர்கள் மீதான தற்போதைய தாக்குதல்கள் மிகவும் ஆபத்தானது. உங்களுக்கு ஏதேனும் குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என்றால் அதை என் மீது சுமத்துங்கள். ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் என் மீது எடுங்கள். சமூக வலைதளம் என்பது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை தாக்குப்பிடிப்பதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.