2016 ஆம் ஆண்டு பிரச்சாரத்தின் போது ஒரு ஆபாச நட்சத்திரத்திற்கு பணம் செலுத்தியதற்காக டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் கிராண்ட் ஜூரி குற்றம் சாட்டிய நிலையில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக மாறியுள்ளார்.


டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு


ஆபாசப்பட நடிகையும், நட்சத்திரமுமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்திய விவகாரத்தில் மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி மூலம் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மேலும் அவர் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டாலும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் என்று சட்ட அமலாக்க வட்டாரம் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. டிரம்ப் இந்த குற்றச்சாட்டை "அரசியல் துன்புறுத்தல் மற்றும் தேர்தல் தலையீடு" என்று சாடியுள்ளார். வழக்கறிஞர்கள் மற்றும் அவரது ஜனநாயக எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பொங்கி எழும் என்றும், அது ஜனாதிபதி ஜோ பிடனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சபதம் செய்தார்.



தேர்தலில் போட்டியிட முடியாதா?


ஜனநாயகக் கட்சியின் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் பிராக் தலைமையிலான விசாரணையில் இருந்து எழும் குற்றச்சாட்டுகள், 2024 ஜனாதிபதிப் போட்டியை மாற்றியமைக்கலாம் என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டால் வேறு ஒரு குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான பிரச்சாரத்தைத் தொடருவேன் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார். குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, வரும் நாட்களில் குற்றப்பத்திரிகை அறிவிக்கப்படும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: GT vs CSK IPL 2023: ஐ.பி.எல். தொடக்க போட்டி..! நேருக்கு நேர் மோதும் சென்னை - குஜராத்..! வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?


வெளியில் சொல்லாமல் இருக்க பணம்


ஜனவரி மாதம் ப்ராக் கூட்டிய ஒரு பெரிய நடுவர் மன்றம், டிரம்ப் வென்ற 2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததில் டிரம்பின் பங்கு பற்றிய ஆதாரங்களைக் கேட்கத் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டு டிரம்புடன் நடந்த பாலியல் தொடர்பு குறித்து வெளியில் கூறாமல் இருப்பதற்காக பணம் பெற்றதாக ஸ்டெபானி கிளிஃபோர்ட் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல அடல்ட் திரைப்பட நடிகையும் இயக்குநருமான ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறியுள்ளார்.



ட்ரம்பின் வழக்கறிஞர்


ட்ரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், டேனியல்ஸ் மற்றும் மாடல் கரேன் மெக்டௌகலுக்கும், அவருடன் உடலுறவு வைத்திருந்ததாகக் கூறியதற்காக பணம் கொடுத்ததாக கூறினார். ஆனால் இரு பெண்ணுடனும் தொடர்பு இல்லை என்று டிரம்ப் மறுத்துள்ளார். ஃபெடரல் வழக்கறிஞர்கள் 2018 இல் டேனியல்ஸ்-இன் வங்கிக்கணக்கை ஆய்வு செய்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட கோஹனுக்கு சிறைத்தண்டனை கிடைத்தது. ஆனால் அதில் டிரம்ப் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. இந்த நிலையில் இதுவரை எந்த ஒரு முன்னாள் அல்லது பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியும் இதுவரை கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதில்லை. தற்போது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லேண்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆலோசகராலும், ஜார்ஜியாவில் உள்ள ஒரு உள்ளூர் வழக்கறிஞராலும் ட்ரம்ப் இரண்டு குற்றவியல் விசாரணைகளை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.